தீச்சட்டி ஏந்தலை... 2ஜி வழக்கில் கெத்தா ஜெயிச்சோம்- கொண்டாடும் திமுகவினர்
2ஜி வழக்கில் இருந்து கனிமொழி, ராசா விடுதலை பெற்றதை கொண்டாடி வருகின்றனர் திமுகவினர்.
சென்னை: 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து கனிமொழி, அ ராஜா உள்ளிட்டோர் விடுதலை பெறுவதற்காக மண் சோறு சாப்பிடவில்லை, தீச்சட்டி ஏந்த வில்லை என்று பதிவிட்டுள்ளார் திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா.
பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. இந்ம வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றத்தை தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிப்பதில் விசாரணை அமைப்புகள் பரிதாபமாக தோல்வி அடைந்துள்ளன. குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்க சிபிஐயும், அமலாக்க துறையும் தவறிவிட்டன.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையில் தாக்கல் செய்யப்பட்ட குற்றங்கள் அனைத்தும் தவறானதாக தெரிகிறது. இந்த வழக்கில் ஒன்றுமே இல்லாத விஷயத்தை சிலர் ஊழலாக சித்தரித்துள்ளனர். வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து உத்தரவிடுகிறேன்
2ஜிவழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி சைனி அறிவித்துள்ளதோடு, ஆதாரங்களுக்காக தான் 7 ஆண்டுகள் காத்திருந்தும், சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவால் ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இந்த தீர்ப்பின் மூலம் திமுக மீதான பழி முழுமையாக விலகியுள்ளதாக திமுகவினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
Hahaha 👏👍💪💪💪🌄
— T R B Rajaa (@TRBRajaa) December 21, 2017
*மண்சோறு சாப்பிடவில்லை..*
*தீச்சட்டி தூக்கவில்லை...*
*பால்குடம் ஏந்தவில்லை...*
*வாய்தா வாங்கவில்லை...*
*கெத்தா நின்னு நீதியை நிலைநாட்டினோம்....* #திமுகடா 😎💪🌄#2Gverdict #DMKtriumphs #DMKClean #DMK
மண்சோறு சாப்பிடவில்லை..தீச்சட்டி தூக்கவில்லை...பால்குடம் ஏந்தவில்லை...வாய்தா வாங்கவில்லை...கெத்தா நின்னு நீதியை நிலைநாட்டினோம்.... என்று பதிவிட்டுள்ளார் எம்எல்ஏ ராஜா.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications