ஆளும் கட்சி எம்எல்ஏ ஆவேசமாக சிறைபிடித்த மக்கள்.. ஆம்பூரே அரண்டு போச்சு.. நடுரோட்டில் பரபரப்பு
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ஆளும்கட்சி எம்எல்ஏ பொது மக்களால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்து உள்ளது பாப்பனப்பல்லி ஊராட்சி.. இங்கு ஆறு மாதத்திற்கு மேலாக முறையான குடிநீர் விநியோகம் இல்லை என்று கூறப்படுகிறது. பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்த மக்கள் இன்று பொங்கி எழுந்தனர்.

பாப்பனபல்லி ஊராட்சி அலுவலகம் எதிரே 200க்கும் மேற்பட்ட மக்கள், உமராபாத்-வாணியம்பாடி சாலைக்கு வந்தனர். அங்கு அரசு பஸ்ஸை சிறைபிடித்து காலிக்குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே ஊர் மக்கள் சிலர் ஊராட்சி அலுவலகத்திற்கு சென்றனர். ஊராட்சி தலைவர் பூபதி மற்றும் துணை தலைவர் கார்த்திகேயன் ஆகியோரை அலுவலகத்திலேயே வைத்து பூட்டினர். சாலை மறியல் செய்த மக்களை சமாதானப்படுத்த திமுகவைச் சேர்ந்த ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன் சென்றார்..

ஆளும் கட்சி எம்எல்ஏ வில்வநாதனை சிறைபிடித்த மக்கள், அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது எம்எல்ஏ இன்றே நிரந்தர தீர்வை உருவாக்கிவிட முடியாது என்றும் விரைவில் சரி செய்துவிடலாம் என்றும், தண்ணீர் பிரச்சனைக்கு கண்டிப்பாக தீர்வு அளிக்கப்படும் என்றும் எம்எல்ஏ வில்வநாதன் அவர்களிடம் எடுத்துரைத்தார்.
அப்போது ஒருவர், இன்றே ஸ்டெப் எடுக்க முடியாது என்பதை ஏற்கிறோம்.ஆனால் ஊராட்சியில் நான்கு வருடமாக என்ன செய்தார்கள் என்று தொடர்ந்து கேள்வி எழுப்பியபடி இருந்தார்.
இது தொடர்பாக பாப்பனப்பல்லியை சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் எம்பி எங்கள் கிராமத்தின் தண்ணீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்துவோம் என்று சொல்லி ஓட்டுக் கேட்டார். ஆனாலும் இன்று வரை தீர்வு கிடைக்கவில்லை என்றார்.
இதனிடையே போலீசாரும், அதிகாரிகளும் சென்று சீரான குடிநீர் விநியோகத்திற்கு உறுதி அளித்த பிறகே மறியலை மக்கள் கைவிட்டனர். ஊராட்சி அலுவலகத்தில் பூட்டப்பட்ட தலைவர், துணை தலைவர் ஆகியஇருவரையும் போலீசார் விடுவித்தனர். இந்த மறியல் காரணமாக வாணியம்பாடி உமராபாத் சாலையில் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ஆளும்கட்சி எம்எல்ஏ சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications