"கோமாளி" என்று சொல்லலாம், தவறில்லை... சபாநாயகர் தனபால் அதிரடி!
சென்னை: கோமாளி என்ற வார்த்தை தவறானதல்ல, பயன்படுத்தக் கூடாத வார்த்தையும் அல்ல என்று தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் கூறியுள்ளார்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் சட்டசபையில் நேற்று விவாதத்திற்கு வந்தது. அந்தத் தீர்மானத்தை முன்மொழிந்து துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நேற்று பேசினார். அப்போது 2011ல் நடந்த சட்டசபை பொதுத் தேர்தல், அதன் பின்னர் வந்த இடைத் தேர்தல்கள், அதில் அதிமுக பெற்ற வெற்றி குறித்து விலாவாரியாக விளக்கிப் பேசினார்.

அப்போது குறுக்கிட்ட திமுக உறுப்பினர் ஜே. அன்பழகன், 2006 முதல் நடந்த இடைத் தேர்தல்களையும் இணைத்து ஜெயராமன் பேசலாமே என்றார். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. இருப்பினும் அன்பழகனைத் தொடர்ந்து பேச சபாநாயக் அனுமதிக்கவில்லை. தொடர்ந்து எழுந்து பேசியபடி இருந்தார். இதைப் பார்த்த பொள்ளாச்சி ஜெயராமன், அன்பழகன், கோமாளி போல அடிக்கடி இடைமறிக்கிறார் என்றார்.
இதனால் திமுகவினர் கோபமடைந்தனர். கோமாளி என்று விமர்சிப்பது தவறு, அதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து எழுந்த அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், கோமாளி என்பது பயன்படுத்தக் கூடாத வார்த்தை என்றால் அதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க பரிசீலிக்கலாம் என்றார்.
ஆனால் திமுகவினர் ஏற்கவில்லை. சபாநாயகர் இருக்கை முன்பு குழுமி தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சபாநாயகர் தனபால் பேசுகையில், தி.மு.க. எம்.எல்.ஏ., துரைமுருகன், 1981 ஏப்., 2ம் தேதி, சட்டசபையில் பேசுகையில், கோமாளி போல பேசுகிறார் என குறிப்பிட்டு உள்ளார். கோமாளி என்ற வார்த்தை, சட்டசபையில் பயன்படுத்தக் கூடாத வார்த்தை அல்ல; எனவே, அந்த வார்த்தையை சபைக் குறிப்பிலிருந்து நீக்க முடியாது என, அறிவித்தார்.
இதை திமுக உறுப்பினர்கள் ஏற்கவில்லை. தொடர்ந்து கோரிக்கை விடுத்தபடி இருந்தனர். இதையடுத்து அனைவரையும் வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். அதன்படி திமுகவினர் வெளியேற்றப்பட்டனர்.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications