For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வி.எச்.பி. யாத்திரையை அனுமதிப்பதா? சட்டசபையில் அமளி- திமுக எம்.எல்.ஏக்கள் கூண்டோடு வெளியேற்றம்

சட்டசபையில் சபாநாயகர் இருக்கை முன்பு கூடி முழக்கமிட்ட திமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

Recommended Video

    ரத யாத்திரைக்கு எதிர்ப்பு...எதிர்க்கட்சிகள் அமளி...வீடியோ

    சென்னை: ராம ராஜ்ஜிய ரத யாத்திரைக்கு அனுமதி அளித்ததை கண்டித்து சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். சாலையில் மறியல் செய்த திமுக உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர்.

    தமிழகத்தில் வி.எச்.பி. ரத யாத்திரைக்கு எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ரத யாத்திரைக்கு மதக்கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறிய ஸ்டாலின், சட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.

    DMK MLAs evicted from Tamil Nadu Assembly

    ரத யாத்திரை குறித்து டிஜிபி விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்திய ஸ்டாலின் இது அதிமுக ஆட்சியா? அல்லது பாஜக ஆட்சியா? என விமர்சித்தார்.

    இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்தார். ரத யாத்திரைக்கு அரசியல் சாயம் பூசுவது சரியல்ல என்றும் 5 மாநிலங்களில் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் யாத்திரை வந்துள்ளது. யாத்திரையால் எந்த பாதிப்பும் இருக்கக்கூடாது என காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக முதல்வர் விளக்கம் அளித்தார்.

    அதை ஏற்க மறுத்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் அமளி துமளியில் ஈடுபட்டனர். இருக்கையில் அமர கோரி சபாநாயகர் வலியுறுத்தியும் அவர்கள் அமளியில் ஈடுபடவே கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.

    இதனையடுத்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடை செய் தடை செய் என்று சாலையில் அமர்ந்து முழக்கமிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    English summary
    DMK legislators were evicted from the Tamil Nadu Assembly in Chennai today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X