For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Breaking News: தாமிர உருக்கு ஆலை தமிழகத்துக்கு வேண்டாம் என சட்டம் இயற்ற ஸ்டாலின் வலியுறுத்தல்

திமுக எம்.எல்.ஏக்கள் இன்று சட்டசபை கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் தாமிர உருக்கு ஆலை வேண்டாம் என சட்டசபையில் சட்டம் இயற்ற வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சட்டசபையில் ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனை குறித்த விவாதத்தில் ஸ்டாலின் இதனை வலியுறுத்தினார். மேலும் ஸ்டெர்லைட் ஆலை செலுத்திய ரூ100 கோடி அபராத தொகை எங்கே எனவும் கேள்வி எழுப்பிய ஸ்டாலின், துப்பாக்கிச் சூட்டில் பலியானோருக்கு ரூ1 கோடி நிவாரணம் தர வலியுறுத்தினார். அத்துடன் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் எனவும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

DMK MLAs to return to Assembly Live updates

Newest First Oldest First
8:37 PM, 4 Jun

கருணாநிதியின் 95வது பிறந்தநாளையொட்டி பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு

கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து

8:37 PM, 4 Jun

கருணாநிதியின் 95வது பிறந்தநாளையொட்டி பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு

கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து

8:33 PM, 4 Jun

திமுக தலைவர் கருணாநிதியுடன் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு
8:02 PM, 4 Jun

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை சம்மன்

நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன்

7:41 PM, 4 Jun

தூத்துக்குடி துப்பாக்கி சூடு வேதனை அளிக்கிறது- சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி

13 பேர் உயிரிழந்தது துரதிர்ஷ்டவசமானது - தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி

6:53 PM, 4 Jun

தமிழகத்தில் ஜூன் 11 முதல் மருத்துவ மாணவர் சேர்க்கை விண்ணப்பம் வழங்கப்படும்
விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூன் 19 வரை அவகாசம்
மாணவர் சேர்க்கை நடைபெறும் நாள் ஜூன் 10ல் அறிவிக்கப்படும்
நீட் முடிவுகள் வெளியானதை அடுத்து மருத்துவ கல்வி இயக்ககம் அறிவிப்பு
6:49 PM, 4 Jun

காலா படத்துக்கு பாதுகாப்பு கேட்டு தனுஷ் வழக்கு
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தனுஷ் மனு தாக்கல்
5:44 PM, 4 Jun

கர்நாடகா, தமிழ்நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டும் - கமல்ஹாசன்

நீதிமன்றம் சொல்லி இரண்டு மாநிலத்திற்கும் ஒற்றுமை வராது - கமல்ஹாசன்

காலா திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் - கமல்ஹாசன்

விஸ்வரூபம் போல காலாவும் தடைகளை தாண்டி வெளியாகி வெற்றிபெறும் - கமல்ஹாசன்

எஸ்வி சேகர் இதுவரை கைது செய்யப்படாதது தவறுதான் - கமல்ஹாசன்

தவறு செய்தது யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - கமல்ஹாசன்

5:42 PM, 4 Jun

கர்நாடகா- தமிழக ஒற்றுமைக்காகவே முயற்சி- கமல்ஹாசன்

காலா திரைப்படம் வெற்றிகரமாக வெளியாகும்

5:38 PM, 4 Jun

கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு
4:52 PM, 4 Jun

தென்மேற்கு பருவமழை தமிழகம், புதுச்சேரியில் முழுவதும் பரவியுள்ளது - வானிலை மையம்

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

3:22 PM, 4 Jun

தமிழ்நாட்டில் 45333 பேர் நீட் தேர்வில் தகுதி

தமிழகத்தைச் சேர்ந்த கீர்த்தனா அகில இந்திய அளவில் 12-வது இடம்

3:19 PM, 4 Jun

குமாரசாமியுடன் தமிழக விவசாயிகள் சந்திப்பு
3:19 PM, 4 Jun

நீட் தேர்வில் தமிழக மாணவி கீர்த்தனா 12வது இடம்

கீர்த்தனா 676 மதிப்பெண்கள் பிடித்து தேசியளவில் 12ஆம் இடம்

2:17 PM, 4 Jun

சென்னை உயர்நீதிமன்றத்தில் 7 புதிய நீதிபதிகள் பதவியேற்பு
2:00 PM, 4 Jun

காவிரி பிரச்னையை பேசித் தீர்க்க வேண்டும் என்கிற கமல் கருத்துக்கு கடும் எதிர்ப்பு

நடிகர் கமல் வாயை மூடிக்கொண்டு இருப்பது நல்லது: பாலகிருஷ்ணன்

காவிரி பிரச்னை மீண்டும் தவறான பாதைக்குப் போவது சரியல்ல: முத்தரசன்

காவிரி விஷயத்தில் கமல் பச்சை துரோகம் செய்துவிட்டார்: மணியரசன்

தமிழக விவசாயிகளை அழிக்கவே கமல் கர்நாடக முதல்வரை சந்தித்துள்ளார் : பி.ஆர் பாண்டியன்

1:46 PM, 4 Jun

நீட் தேர்வில் 720க்கு 691 மதிப்பெண் எடுத்து கல்பனா குமாரி முதலிடம்
1:16 PM, 4 Jun

மக்களை நேரில் சந்தித்து விசாரணை நடத்தப்படும் - அருணா ஜெகதீசன்

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நபர்களும் விசாரணை செய்யப்படுவார்கள்

ஊடகவியலாளர்கள் தங்கள் வாக்கு மூலங்களை தெரிவிக்கலாம்

உயரதிகாரிகள் உட்பட காவல் துறையினரும் விசாரணை செய்யப்படுவார்கள்

1:15 PM, 4 Jun

மக்கள், போலீஸ் தெரிவிக்கும் தகவல்கள் ரகசியம் காக்கப்படும் - அருணா ஜெகதீசன்

நாளை ஆட்சியர் அலுவலகம் ஸ்டெர்லைட் குடியிருப்பில் விசாரணை நடத்தப்படும் - அருணா ஜெகதீசன்

1:13 PM, 4 Jun

நீட் தேர்வில் 691 மதிப்பெண் முதல் மதிப்பெண்ணாக அறிவிப்பு

720 மதிப்பெண்களுக்கு நீட் தேர்வு நடத்ப்பட்டது

ஓசி பிரிவுக்கு 119 மதிப்பெண்ணும், ஓபிசி பிரிவுக்கு 96 மதிப்பெண் தகுதி மதிப்பெண்ணாக நிர்ணயம்

1:13 PM, 4 Jun

காவிரி பிரச்சனையை மீண்டும் பேசித் தீர்க்க வேண்டும்- கமல்

குமாரசாமியுடனான பேச்சுவார்த்தையில் பெருந்தன்மை இருந்தது- கமல்

மக்கள் நலன் குறித்த பேச்சுதானே தவிர கூட்டணி அல்ல- கமல்

1:08 PM, 4 Jun

திரைப்படங்களை விட காவிரி பிரச்சனை முக்கியமானது- கமல்

காவிரி: தமிழகத்துடன் பேச்சு நடத்த தயார்- குமாரசாமி

1:06 PM, 4 Jun

பெங்களூருவில் குமாரசாமி- கமல் கூட்டாக பேட்டி

இரு மாநிலங்களும் சகோதரத்துவத்துடன் இருக்க வேண்டும் என கமல் வேண்டுகோள்

கருத்து வேறுபாடுகள் இல்லாமல் பிரச்சனைக்கு தீர்வு காண கமல் வலியுறுத்தல்

கர்நாடகா விவசாயிகளைப் போல தமிழக விவசாயிகளும் முக்கியம்- குமாரசாமி

சினிமா விவகாரம் குறித்து குமாரசாமியுடன் பேசவில்லை

1:04 PM, 4 Jun

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை ஆணைய தலைவர் செய்தியாளர்களுடன் சந்திப்பு

பொதுமக்கள் தங்கள் வாக்கு மூலங்களை தெரிவிக்கலாம் - அருணா ஜெகதீசன்

பொதுமக்கள் எந்த விதமான தயக்கமும் இல்லாமல் நடந்ததை கூற வேண்டும்

கைவசம் வீடியோக்கள் இருந்தால் எடிட் செய்யாமல் ஒரு வாரத்திற்குள் அளிக்கலாம்

ஜூன் 22ம் தேதிக்குள் பிரமாண பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும்

தூத்துக்குடியில் உள்ள விசாரணை அலுவலகத்தில் பிரமாண பத்திரிக்கை தாக்கல் செய்யலாம் - அருணா ஜெகதீசன்

1:03 PM, 4 Jun

உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் மக்கள் வாழ்க்கை பாதிப்பு- தா.மோ. அன்பரசன்

சட்டசபையில் உள்ளாட்சி மானியக் கோரிக்கை மீது அன்பரசன் பேச்சு

12:53 PM, 4 Jun

கர்நாடகா முதல்வர் குமாரசாமியுடன் கமல் சந்திப்பு
12:49 PM, 4 Jun

தமிழகம் உட்பட பல மாநிலங்களில் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாடு, தெலுங்கான, கர்நாடகா மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்

தெலுங்கானா, கேரளா, வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்யும்

இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

12:41 PM, 4 Jun

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு
12:28 PM, 4 Jun

சிறையில் இருக்கும் வேல்முருகனுடன் விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் சந்திப்பு
என் எல் சி வளாகத்தின் முன்பு போராட்டம் நடத்தியதற்காக வேல்முருகன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்
தவாக தலைவர் வேல்முருகன் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார்
11:41 AM, 4 Jun

ஸ்டெர்லைட் ஆலையை இனி திறக்க முடியாது

சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ஸ்டெர்லைட் ஆலை மூடி நிரந்தரமாக சீல் வைக்கப்பட்டுள்ளது- எடப்பாடி

READ MORE

English summary
The DMK MLAs are getting back to the Assembly today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X