ஆளுநர் மாளிகை முன் திமுக எம்எல்ஏக்கள் திடீர் சாலை மறியல்
போலீசார் தாக்கியது குறித்து புகார் தெரிவிக்க எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கிண்டி ஆளுநர் மாளிகைக்கு சென்றார்.
சென்னை: சட்டசபையில் ஜனநாயகம் மறுக்கப்பட்டுள்ளது என்று முழக்கமிட்டு திமுக எம்எல்ஏக்கள் ஆளுநர் மாளிகை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வைத்து திமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்கள் குண்டுகட்டாக சபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, ஸ்டாலின் வெளியேற மறுத்து தர்ணாவில் ஈடுபட்டார். அவரையும் போலீசார் குண்டுக்கட்டாக வெளியேற்றியுள்ளனர். இதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் மு.க. ஸ்டாலினின் சட்டை கிழிக்கப்பட்டது. இதுகுறித்து புகார் தெரிவிக்க மு.க. ஸ்டாலின் கிழிந்த சட்டையுடனேயே ஆளுநர் மாளிகைக்கு சென்றார். அப்போது அவருடன் சென்ற எம்எல்ஏக்கள் சாலையில் அமர்ந்து திடீரென மறியல் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

மறியல் போராட்டத்தின் போது ஜனநாயகத்தை பறிக்காதே.. போலீஸ் அராஜகம் ஒழிக.. சபாநாயகரை கண்டிக்கிறோம் என்று திமுக எம்எல்ஏக்கள் போராட்டத்தின் போது முழக்கங்களை எழுப்பினார்கள். கிண்டி சாலையில் திடீரென திமுக எம்எல்ஏக்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.
-
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications