Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"டேய்.. யார்ரா அவன்.. அந்த நாயை வெளிய தூக்கிட்டு போங்கப்பா".. ஆ ராசாவா இது.. ரொம்ப கேவலமான பேச்சு!

பெரம்பலூரில் ஆ.ராசாவின் பேசிய பேச்சு வைரலாகி வருகிறது

Subscribe to Oneindia Tamil

பெரம்பலூர்: "டேய்.. யார்ரா அவன்.. அந்த நாயை வெளிய தூக்கிட்டு போங்கப்பா" என்று பொது மேடையில், தன் கட்சி தொண்டரை எம்பி ராசா திட்டிய வீடியோ ஒன்று அதிர வைப்பதாக உள்ளது. இந்த வீடியோதான் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

மத்திய அரசின் புதிய விவசாய சட்டத்தை கண்டித்து திமுக நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.. அந்த வகையில், பெரம்பலூரிலும் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா பங்கேற்றார். இதற்காக, பெரம்பலூர் காந்தி சிலை முன்பு ஒரு மேடையும் அமைக்கப்பட்டிருந்தது. ராஜா பேச ஆரம்பித்ததுமே கீழே ஒரு தொண்டர் 'ராசா வாழ்க வாழ்க' என்று கோஷமிட்டார்.

பெரம்பலூர்

பெரம்பலூர்

அவர் மது போதையில் இருந்துள்ளதாக தெரிகிறது.. கையில் கட்சி கொடி, பதாகைகளுடன் நின்று கொண்டிருந்தார்.. எனினும் ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது... கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பேசி முடித்தனர்.. இவர்களுக்கு பிறகு ராசா பேசினார். மசோதா குறித்து ரொம்ப சீரியஸான கருத்துக்களை எடுத்து வைத்தார்.. மசோதாவில் இருக்கும் விவசாயிகளுக்கான பாதகங்களை விலாவரியாக சொல்லி கொண்டே இருந்தார்.

ஆ.ராசா

ஆ.ராசா

அப்போது, அதே தொண்டர், மறுபடியும் 'ராசா வாழ்க', 'ராசா வாழ்க', என்று கோஷம் போட்டு கொண்டே இருந்தார்.. அவர் சத்தம் மட்டும் அந்த கூட்டத்தில் கேட்டு கொண்டே இருந்தது.. இது பேசி கொண்டிருந்த ராசாவுக்கு இடைஞ்சலாகவும் இருந்தது.. ஒரு கட்டத்தில் டென்ஷன் அடைந்துவிட்ட ராசா, "ஏய்.. யார்ரா அவன்.. அந்த நாயை வெளிய தூக்கிட்டு போங்கப்பா" என்று சொன்னார். பொது மேடையிலேயே தன் கட்சி தொண்டரையே எம்பி ஒருவர் "நாயே" என்று திட்டிய வீடியோ, தற்போது, சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

ராசா உண்மையிலேயே அப்படி சொல்லக்கூடியவர் இல்லைதான்.. எத்தனையோ இளைஞர்களுக்கு தன்னெழுச்சி தரக்கூடிய கருத்துக்களை பரப்பி வருபவர்.. உத்வேகம் தரும் பேச்சுக்களை மாணவர்களிடையே பேசி வருபவர்.. அதற்கு இவரது பல யூடியூப் வீடியோக்களே சாட்சியாக வலம் வருகின்றன.. எனினும் குடிபோதையில் நிகழ்ச்சிக்கு இடையூறாக இருந்ததற்காக நாயே என்று சக மனிதரை ஒரு மூத்த தலைவர் சொல்லி இருக்ககூடாதுதான்!

விஜயகாந்த்

விஜயகாந்த்

இப்படித்தான் முன்பு ஒருமுறை தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்ட கூட்டத்தில் தொண்டர்கள் கத்திக் கொண்டே இருந்தனர். இதனால் விஜயகாந்த்தால் சரியாக பேச முடியவில்லை. அவரே குரல் தடுமாறி பேசிக் கொண்டிருந்தார். தொடர்ந்து தொண்டர்கள் சத்தம் போட்டபடி இருந்ததால் அந்தப் பக்கம் திரும்பி "டேய் யார்டா அவன்.. சொல்ல சொல்ல கேட்காம" என்று சற்று அதட்டினாரே தவிர வார்த்தையை விடவில்லை. நாய் என்று சாடவில்லை.

தப்புதான்

தப்புதான்

அது எவ்வளவு பெரிய தவறான வார்த்தை? இந்தத் தலைவர்களுக்காக ஓடாய் உழைத்து, பிற கட்சிக்காரர்களிடம் அடி உதை வாங்கி, குடும்பத்தை சரியாக கவனிக்காமல் இப்படி கட்சியே, தலைவரே என்று கதியாய்க் கிடக்கும் அவர்கள் எல்லா வேதனைகளையும் தாங்கித்தான், தாண்டித்தான் தங்கள் தலைவனை "வாழ்க" என்று கோஷமிடுகின்றனர். அப்படிப்பட்டவர்களைப் போய் கேவலமாக திட்டுவது என்ன ஒரு மன நிலை.. ராசா பேசியது ரொம்ப ரொம்ப தப்பு...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+