காவிரி.. கனிமொழி தலைமையில் திமுக எம்பிக்கள் பிரணாப்பிடம் நேரில் வலியுறுத்தல்
சென்னை: காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி, குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை டெல்லியில் இன்று மாலை கனிமொழி தலைமையில் திமுக எம்பிக்கள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
திமுக-வைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் கனிமொழி, திருச்சி சிவா, டி.கே.எஸ். இளங்கோவன், ஆர்.எஸ். பாரதி ஆகியோர் குடியரசுத் தலைவரை டெல்லியில் இன்று மாலை சந்தித்தனர்.

அப்போது குறுவை, சம்பா சாகுபடி பாதிப்பால் காவிரி டெல்டா பகுதிக்கு இடைக்கால நிவாரணமாக காவிரி நீர் திறக்கக் கோரி வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், இது தொடர்பாக மனு ஒன்றையும் அவர்கள் குடியரசுத் தலைவரிடம் வழங்கினர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி ,காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தினோம். எங்கள் கோரிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக குடியரசுத் தலைவர் உறுதி அளித்தார் என தெரிவித்தார்.
-
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications