For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி நடுவர் மன்றத் தீர்மானம் திமுக ஆட்சியில்தான் மலர்ந்தது – திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் நேற்று காவிரி நடுவர் மன்றம் அமைப்பது தொடர்பான அறிக்கையை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ளார்.

காவிரி மேலாண்மை குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை முதன் முதலில் திமுக ஆட்சியில் தான் எழுப்பப்பட்டது என அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

DMK Party Leader released a Statement…

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால், திமுக ஆட்சியில் இருந்த 1971 ஆம் ஆண்டில் தான் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த பிரச்னையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நிலைப்பாடு குறித்து ஆண்டு வாரியாக பட்டியலிட்டுள்ளேன். இவை குறித்த நிகழ்ச்சிகள் மக்களுக்கு மறந்திருக்கும் என்ற போக்கில் தன் மீதான மதிப்பை குறைக்க அவர் முயற்சிக்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி வாய்ப்பை இழந்தது என்ற போதிலும், அறிக்கை விடுவதாக இருந்தாலும், பிரதமருக்கு கடிதம் எழுதுவதாக இருந்தாலும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் எண்ணம் திமுகவை சுற்றியே இருப்பதை பார்ப்பவர்களுக்கு உண்மையான வெற்றி யாருக்கு என்பது புரியும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

English summary
DMK Party leader Karunanidhi released a statement about Kaveri Management commission. He says that, the first stepping stone leads in DMK’s government only.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X