நாங்க ரெடி.. நீங்க ரெடியா..? அன்புமணிக்கு தாமரைச்செல்வன் பதில் சவால்
சென்னை: திமுக மற்றும் பாமக அன்புமணி ஆகியோர் இடையேயான அறிக்கை யுத்தம் இன்னும் நின்றபாடில்லை.
தமிழக அரசை விமர்சனம் செய்ய திமுகவுக்கு தகுதியில்லை என்று ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் எழுதிய கடிதத்தை தொடர்ந்து, தருமபுரி முன்னாள் எம்.பி தாமரைச் செல்வன் மூலம் திமுக அன்புமணி ராமதாசுக்கு பதில் அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில், தாமரைச் செல்வனை வைத்து ஸ்டாலின் போக்குகாட்டுவதாக கூறி அன்புமணி ராமதாஸ் நேற்று ஒரு காட்டமான கடிதத்தை ஸ்டாலினுக்கு எழுதியிருந்தார்.

இந்த அக்கப்போர் இத்தோடு முடியும் என்று பார்த்தால், இன்று, தாமரைச் செல்வன் மீண்டும் ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அதில் "தாங்கள் அன்பானவர் மட்டுமல்ல, அழகானவரும் என்று நினைத்த அப்பாவி வன்னியர்களில் நானும் ஒருவன். ஆனால், அழகு இருக்கும் இடத்தில் 'அது' இருக்காது என்பதை தாங்கள் நேற்று விட்ட பிதற்றல் மூலம் எங்களுக்கு மீண்டும் புரிய வைத்துள்ளீர்கள்.
தங்களைப் பற்றி அரிக்கை விடுத்த வவழக்கின் வாதியாகிய என்னை வாதத்துக்கு அழைக்காமல், வழக்கிற்கே சம்மந்தமில்லாதவருக்கு சம்மன் அனுப்பும் அதி புத்திசாலி நீங்கள்.

வழக்கில் சம்மந்தமில்லாமல் ஆஜராவதுதானே தங்களின் வாடிக்கை. வழக்கு தொடுத்தது நான், வாதத்திற்கு வாய்ப்பை முதலில் எனக்கு தாருங்கள். முதலில் என் வாதத்துக்கு பதில் கூறுங்கள். கீழ் கோர்ட்டைத் தாண்டிதானே மேல் கோர்ட்டிற்கு போக முடியும்? வாதத்தை எங்கு வைப்போம்? தருமபுரியிலா? சென்னையிலா? தங்களின் தைலாபுரம் தோட்டத்திலா? நான் ரெடி.. நீங்க ரெடியா?.." இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications