சென்னை உட்பட தமிழகம் முழுவதும் எச் ராஜா கொடும்பாவியை எரித்து போராட்டம்
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் எச் ராஜா கொடும்பாவியை எரித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை: பெரியார் சிலையை தகர்ப்போம் என கூறிய பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா கொடும்பாவியை எரித்து தமிழகம் முழுவதும் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டதை போன்று தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

அவரது இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதைத்தொடர்ந்து தனது சர்ச்சைக்குரிய ஃபேஸ்புக் பதிவை நீக்கினார் எச் ராஜா.
இந்நிலையில் எச் ராஜாவுக்கு எதிராக சென்னை பூவிருந்தவல்லியில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எச் ராஜாவுக்கு எதிராக முழக்கமிட்ட அவர்கள் அவரது கொடும்பாவியையும் எரித்தனர்.

இதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், சென்னை ஆர்கே நகர், சைதாகப்பேட்டை, திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களிலும் எச்.ராஜா உருவபொம்மை எரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகம் முழுவதும் எச் ராஜாவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனர்.
எச் ராஜா பெரியார் சிலை குறித்த தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்த பின்னரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications