தூத்துக்குடி துப்பாக்கி சூடு: திமுக சட்டசபையில் அமளி
ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு குறித்த அவை ஒத்திவைப்பு தீர்மானத்தை சபாநாயகர் ஏற்காத காரணத்தால் திமுக சட்டசபையில் அமளியில் ஈடுபட்டு வருகிறது.
Recommended Video

சென்னை: ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு குறித்த அவை ஒத்திவைப்பு தீர்மானத்தை சபாநாயகர் ஏற்காத காரணத்தால் திமுக சட்டசபையில் அமளியில் ஈடுபட்டு வருகிறது.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. இது இந்த வருடத்தில் நடக்கும் இரண்டாவது கூட்டத்தொடர் ஆகும். காலை பத்து மணிக்கு கூட்ட தொடர் தொடங்கி உள்ளது. இதில் பல முக்கியமான விஷயங்கள் குறித்து விவாதம் நடத்தப்பட உள்ளது.

சட்டசபை கூட்டத்தொடரில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து திமுக விவாதம் நடத்த அழைத்து, அதோடு ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனை காரணமாக அவை ஒத்திவைப்பு தீர்மானத்தை சபாநாயகரிடம் அளித்தது. ஏற்கனவே துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சட்டசபையில் எம்எல்ஏக்கள் தினகரன், அன்சாரி, சண்முகநாதன் மூலம் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனால் சபாநாயகர் திமுகவின் அவை ஒத்திவைப்பு மனுவை ஏற்கவில்லை. இதனால் திமுக கட்சி அமளியில் ஈடுபட தொடங்கியது. மு.க. ஸ்டாலின், அவை ஒத்திவைப்பு தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார்.
ஆனாலும் சபாநாயகர் தீர்மானத்தை ஏற்கவில்லை. இதனால் திமுகவினர் சபாநாயகர் இருக்கை முன் சென்று அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து திமுகவினர் கருப்பு உடையில் வந்திருந்தனர்.












Click it and Unblock the Notifications