தோல்வி பயத்தில் திமுகவினர் பொய் பிரச்சாரம் செய்கின்றனர்: ஜெயலலிதா
சென்னை : பொய்ப்பிரசாரம் செய்த தி.மு.க.வினருக்கு கடந்த லோக்சபா தேர்தலில் மக்கள் சரியான சம்மட்டி அடியை கொடுத்தனர்.
இருப்பினும், பொய்ப்பிரசாரம் ஒன்றையே தங்களது பிரசார ஆயுதமாக நம்பியுள்ள தி.மு.க.வினர் தற்போதும், 110 விதியின் கீழ் நான் செய்த அறிவிப்புகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை என திரும்ப திரும்ப பொய் பேசி வருகின்றனர் என்று அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
கருணாநிதிக்கும், திமுக வினருக்கும் மே 16ம்தேதியன்று நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் தாங்கள் எந்த தொகுதியிலும் வெற்றி பெறப்போவதில்லை என்பது தெரிந்துள்ளது. அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் தான் வெற்றி பெறப்போகிறார்கள் என்பது இவர்களுக்கு தெரியும். எனவே தான் பலவித பொய்ப்பிரசாரங்களை தி.மு.க.வினர் மேற்கொண்டு வருகின்றனர்.
2011ம் ஆண்டு அ.தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளில், 90 சதவீதம் நிறைவேற்றப்படவில்லை என ஒரு பொய்ப் பிரசாரத்தை தி.மு.க.வினர் மேற்கொண்டுள்ளனர்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக 2011ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது பற்றி நான் பொதுக் கூட்டங்களில் விரிவாக எடுத்துக்கூறிவருகிறேன்.
கடந்த 5 ஆண்டுகளில் சட்டப் பேரவையில் விதி எண் 110ன் கீழ் பல அறிக்கைகளை நான் அளித்துள்ளேன். அவற்றில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்பது பற்றியெல்லாம் நான் எடுத்துக் கூறியுள்ளேன்.
இந்த திட்டங்கள் நிறை வேற்றப்பட்டுள்ள காரணத்தால் தான், ஒவ்வொரு முறை சட்டமன்றம் கூடும் போதும், 110 விதியின் கீழ் நான் மக்கள் நலன் பயக்கும் விதமாக என்னென்ன புதிய அறிவிப்புகளை வெளியிடப்போகிறேன் என ஒட்டு மொத்த தமிழர்களும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர் என்பதை அனைவரும் அறிவர்.
நான் சட்டமன்றத்தில் அறிவித்த திட்டங்களில் சில திட்டங்கள் உடனடியாக செயல்படுத்தக் கூடியவை. கட்டிடங்கள், சாலைகள், பாலங்கள் கட்டுவது போன்ற அறிவிப்புகள் ஒன்றிரண்டு வருடங்களில் நிறைவேற்றப்படக் கூடியவை.
சில்ல ஹல்லா புனல் மின் திட்டம் போன்ற பெரும் திட்டங்கள் சில ஆண்டுகளில் முடிக்கக் கூடியவை. 110விதிகளின் கீழ் நான் அறிவித்தவை அனைத்தும் செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த லோக்சபா தேர்தலின் போதே இந்த அறிவிப்புகள் எதுவும் நிறை வேற்றப்படவில்லை என்ற ஒரு பொய்ப்பிரசாரத்தை தி.மு.க.வினர் மேற்கொண்டனர். அப்போதைய எனது தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் ஒரு சில உதாரணங்களை சுட்டிக்காட்டி இதற்கு நான் பதில் அளித்துள்ளேன்.
பொய்ப்பிரசாரம் செய்த தி.மு.க.வினருக்கு கடந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் சரியான சம்மட்டி அடியை கொடுத்தனர். எனினும், சட்டப் பேரவை யிலும் தி.மு.க.வினர் இதே குற்றச்சாட்டை எழுப்பினர். அதற்கு சட்டப்பேரவையில் விரிவான பதில் அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், பொய்ப்பிர சாரம் ஒன்றையே தங்களது பிரசார ஆயுதமாக நம்பியுள்ள தி.மு.க.வினர் தற்போதும், 110 விதியின் கீழ் நான் செய்த அறிவிப்புகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை என திரும்ப திரும்ப பொய் பேசி வருகின்றனர்.
மேலும் பள்ளி கல்வித் துறை, உயர்கல்வித் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஆகிய துறைகளில் ஆண்டு தோறும் செய்த அறிவிப்புகள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்பது பற்றி பட்டியலிட்டுள்ள ஜெயலலிதா, பிற துறைகள் பற்றிய விவரங்களும் தொடர்ந்து வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications