கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை... எந்த கட்சிக்கும் ஆட்சியில் பங்கு இல்லை... மு.க.ஸ்டாலின்
திருவள்ளூர்: தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை; எந்த கட்சிக்கும் ஆட்சியில் பங்கும் இல்லை என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் களத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் கூட்டணி ஆட்சி என்ற முழக்கம் முன்வைக்கப்படுகிறது. ஆட்சியில் பங்கு கொடுத்தால்தான் கூட்டணி என்ற கருத்தை காங்கிரஸ் கட்சியும் வலியுறுத்தி வருகிறது.

தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தால் துணை முதல்வர் உட்பட அமைச்சர்கள் பதவி வழங்க வேண்டும் என்ற நிபந்தனையை தே.மு.தி.க. மறைமுகமாக வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி முறையை மக்கள் ஏற்கவே மாட்டார்கள். 1980ஆம் ஆண்டு இதேபோல் தி.மு.க.- காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி ஆட்சி முழக்கத்தை முன்வைத்து தேர்தலை சந்தித்தன.
ஆனால் மக்கள் நிராகரித்துவிட்டார்கள். தமிழகத்தில் தற்போதுள்ள நிலைமை அப்படியே இருக்காது.. கட்சிகள் திசைமாறத்தான் செய்யும். தற்போதைய கூட்டணி நிலைமை என்பது அடியோடு மாறவே செய்யும்.
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications