"அடிச்சது பீட்டர்சனா, ஆன்டர்சனா?" பாவம் அன்பழகனே குழம்பிட்டாரு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐபிஎல் போட்டியில் நேற்று முன்தினம், மும்பை இந்தியன்ஸ் அணியில் பட்டையை கிளப்பியது பீட்டர்சனா? ஆன்டர்சனா? என திமுகவின் ஜே.அன்பழகன் குழம்பி தவித்தார்.

ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் இரவு, மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு நடுவேயான மேட்ச் நடைபெற்றது. இரு அணிகளில் எது அடுத்த சுற்றுக்குள் நுழையப்போகிறது என்பதை தீர்மானிக்கும் போட்டி என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது.

இரண்டாவதாக பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியின் கோரி அன்டர்சன் 44 பந்துகளில் 95 ரன்களை குவித்து திரில் வெற்றிக்கு வித்திட்டார். இந்தாண்டு தொடக்கத்தில் மே. இந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தி்ல 36 பந்துகளில் 100 ரன்களை அடித்த நியூசிலாந்து வீரர் கோரி அன்டர்சன், அதே நேர்த்தியை நேற்றும் தனது ஆட்டத்தில் காண்பித்தார்.

Dmk's Anbazhagan gets confused in the MI player name

இந்த பந்தையத்தை தென்சென்னை மாவட்ட திமுக செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜே.அன்பழகனும் கண் விழித்து பார்த்துக் கொண்டிருந்தார். இவர் திமுகவின் சமூக வலைத்தள தகவல் பதிவில் முக்கிய பங்காற்றுபவரும்கூட. தனது டுவிட்டர் வலைத்தளத்தில் கமெண்ட் அடித்தபடி ஐபிஎல் மேட்சை ரசித்துக் கொண்டிருந்தார். மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றவுடன் அன்பழகன் செய்த டுவிட்டில், "என்ன ஒரு அருமையான மேட்ச். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வாழ்த்துக்கள். பீட்டர்சன் பெரிய பிளேயரைப்போல ஆடினார்" என்று குறிப்பிட்டிருந்தார்.

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>A dramatic match to watch, congrats to MI and hard luck to RR! Peterson played like a Giant. Y not the bowlers cudn't able to bowl yorkers?</p>— J Anbazhagan (@JAnbazhagan) <a href="https://twitter.com/JAnbazhagan/statuses/470625987521019905">May 25, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

இதைபார்த்த அவரது பாலோவர்கள், ஆடியது கோரி ஆன்டர்சன் என்று குறிப்பிட்டு பதில் கொடுத்தனர். சிலர் காவலன் திரைப்படத்தில் வடிவேலு அடிக்கடி கூறும் 'பாவம் அவரே குழம்பிட்டாரு' என்ற டயலாக்கை போட்டுவிட்டனர். இதன்பிறகு சுதாரித்துக் கொண்ட "அன்பழகன் தவறுதலாக பீட்டர்சன் என்று போட்டுவிட்டேன், அது ஆன்டர்சன்" என்று மற்றொரு டுவிட் போட்டு பாலோவர்களை ஆப் செய்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+