திமுகவின் செயல் தலைவரானார் ஸ்டாலின்! பொதுக்குழுவில் தீர்மானம்- தொண்டர்கள் உற்சாகம்!!
திமுக செயல் தலைவராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். திமுக பொதுக்குழுவில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை: திமுகவின் செயல் தலைவராக அக்கட்சியின் பொருளாளர் முக ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் ஸ்டாலினை செயல் தலைவராக நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஸ்டாலின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டதை அக்கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் ஓய்வெடுத்து வருகிறார். முதுமை காரணமாக அவரால் முழுமையாக கட்சிப் பணிகளை மேற்கொள்ள இயலவில்லை.

இதையடுத்து கருணாநிதியின் மகனும் திமுக பொருளாளருமான ஸ்டாலினை செயல் தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. இன்றைய திமுக பொதுக்குழுவில் ஸ்டாலின் செயல் தலைவராக்கப்படுவது உறுதி என கூறப்பட்டது.
இருப்பினும் கருணாநிதியின் உடல்நலக் குறைவை முன்வைத்து ஸ்டாலின் செயல் தலைவராக்கப்படுவாரா? என்ற கேள்வியும் எழுந்தது. இந்த நிலையில் சென்னையில் திமுக பொதுக்குழு இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கருணாநிதி பங்கேற்கவில்லை. திமுக பொதுச்செயலர் அன்பழகன் இப்பொதுக்குழு கூட்டத்துக்கு தலைமை வகித்தார். இக் கூட்டத்தில் முதலில் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் திமுகவின் செயல் தலைவராக ஸ்டாலினை நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்காக திமுகவின் சட்டவிதி 18-ல் திருத்தம் மேற்கொள்ள இன்றைய பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டது.

ஸ்டாலினை செயல் தலைவராக நியமிக்கும் தீர்மானத்தை க. அன்பழகன் முன்மொழிந்தார். துரைமுருகன் வழிமொழிந்தார். இதையடுத்து திமுகவின் செயல் தலைவரான ஸ்டாலினுக்கு அன்பழகன், துரைமுருகன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
ஸ்டாலின் செயல் தலைவரானதை திமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications