திமுகவில் தொடரும் களையெடுப்பு... ஒன்றியச் செயலர்கள் பதவி பறிப்பு!
சென்னை: சட்டசபை தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திமுக ஒன்றியச் செயலாளர்கள் பலரது பதவியை திமுக தலைமை அதிரடியாகப் பறித்துள்ளது.
கடந்த மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அதிக தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. திமுக கூட்டணி 98 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. சொற்ப வாக்குகளில் திமுக பல தொகுதிகளை இழந்தும் இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து தோல்விக்கான காரணம் குறித்து ஆராய ஒரு குழு அமைத்தது திமுக தலைமை. இந்த குழுவின் பரிந்துரைப்படி ஒன்றியச் செயலர்கள், மாவட்ட செயலர்கள் பலரது பதவியும் பறிக்கப்பட்டிருக்கிறது.

அண்மையில் கோவை மாநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் எம்.வீரகோபால், நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் செ.காந்திச் செல்வன், திருநெல்வேலி மேற்கு மாவட்டச் செயலாளர் பெ.கி.துரைராஜ் ஆகியோரது பதவி பறிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மேலும் பல ஒன்றியச் செயலர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் வி.எஸ்.சண்முகம், தஞ்சை தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் என்.செல்வராஜ், தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் மு.கி.முத்துமாணிக்கம், பேராவூரணி ஒன்றியச் செயலாளர் என்.எஸ். சேகர், விழுப்புரம் தெற்கு மாவட்டம் திருக்கோவிலூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் ஆதி.சங்கர் உள்ளிட்டோர் பதவி தற்போது பறிக்கப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
களையெடுப்பு தொடருமாம்!
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications