தலைமை செயலர் ஒப்புதலுடன் ஆய்வு-ஆளுநர் அறிக்கைக்கு விளக்கம் கேட்ட திமுக-பதில் தராததால் வெளிநடப்பு
ஆளுநர் விவகாரத்தில் திமுக இன்று வெளிநடப்பு செய்தது.
சென்னை: தலைமை செயலர் ஒப்புதலுடன் தாம் ஆய்வு நடத்துவதாக ஆளுநர் வெளியிட்ட அறிக்கை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் தர வேண்டும் என சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார். ஆனால் அரசு தரப்பில் பதில் அளிக்காத காரணத்தால் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
இது தொடர்பாக ஸ்டாலின் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
இன்று (27-06-2018) தமிழக சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் நேற்றைய தினம் ராஜ் பவனில் இருந்து வெளியிடப்பட்ட ஒரு செய்திக் குறிப்பை பற்றி கேள்வியெழுப்பினேன். "Raj Bhavan comes out with a legal opinion on powers" என்கிற தலைப்பிலே இன்றைக்கு "தி இந்து" பத்திரிகையிலே கூட தெளிவாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.

அதிலே, குறிப்பிடப்பட்டிருக்கும் செய்தி, Pointing out that there was no illegality in "mere meeting with [the] district officers," which took place after the Governor had requested Chief Secretary Girija Vaidyanathan and Commissioner of Revenue Administration K. Satyagopal to arrange such a meeting என்று மிகத்தெளிவாக அறிக்கை வந்திருக்கிறது. முதலமைச்சருக்கே தெரியாமல் நேரடியாக கவர்னர் மாளிகையில் இருந்து தலைமைச் செயலாளராக இருக்கும் கிரிஜா வைத்தியநாதன் அவர்களோடு தொடர்பு வைத்துக்கொண்டு அந்த அடிப்படையில் தான் நான் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறேன் என்ற செய்தி வந்திருக்கிறது.
இந்த செய்தி அரசுக்கு தெரியுமா? முதலமைச்சருக்கு தெரிந்து தான் நடக்கிறதா? அப்படி இருந்தால் ஏற்கனவே முதலமைச்சர் அரசின் சார்பில் இதற்கு விளக்கம் தந்திருக்க வேண்டும்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, ஆளுநர் மாளிகையிலிருந்து "ஆய்வு நடத்துவதற்காக நான் செல்லவில்லை" என்று ஒரு அறிக்கை வந்தது. ஆனால், இன்றைக்கு தலைமைச் செயலாளரின் ஒப்புதலோடு அவர்களுக்கு தகவல் தெரிவித்து விட்டு தான் ஆய்வு நடத்துகிறோம் என்ற செய்தி வந்திருக்கிறது.
இதைப்பற்றி, அவையில் பேசிட வேண்டுமெனவும் முதலமைச்சர் இதற்கு உரிய விளக்கம் அளித்திட வேண்டுமென கேட்ட நேரத்தில், அதற்கு எதுவும் பேசாமல் வாய்மூடி அமைதியாக இருந்தார். எனவே, எந்த பதிலும் அளிக்காமல் அவர் அமைதியாக இருந்த காரணத்தால் அதனைக் கண்டித்து நாங்கள் தற்காலிகமாக அவையிலிருந்து வெளிநடப்பு செய்தோம்.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
-
விஜய் செல்வாக்கு + பதவி.. திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு பின்னணியில் 2 காரணங்கள்! -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் வெளியானது.. சின்னதுரைக்கு மீண்டும் வாய்ப்பு! -
பெரும் பணக்காரர்களுக்கு செல்வ வரி விதிக்கப்படுமா? நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. வில்சன் கேள்வி -
ஆர்.கே.நகர் தொகுதியில் அனல் பறக்கும் போட்டி.. வாக்குறுதிகளை அள்ளி வீசி களமிறங்கிய தவெக வேட்பாளர்! -
திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம்..விஜய் மைக்குடன் பிரச்சாரம் செய்யக் கூடாதா? தவெக அடுக்கடுக்காக கேள்வி -
4 மண்டலங்களாக.. வகுக்கப்படும் தமிழ்நாடு.. திமுகவின் மிகப்பெரிய வாக்குறுதியே இதுதான்.. அடிதூள்! -
ஸ்டாலின் 6.. கனிமொழி கையில் எடுத்த மேஜிக்.. தேர்தல் போக்கையே மாற்றும் அந்த 6 வாக்குறுதிகள்? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
வில்லிவாக்கத்தில் கொடி நாட்டுவாரா ஆதவ் அர்ஜுனா? சுத்துப் போட்ட திமுக! சூடு பிடிக்கும் களம் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்?












Click it and Unblock the Notifications