தமிழக பட்ஜெட் 2015: திமுக வெளிநடப்பு… கருப்புச் சட்டை அணிந்து தேமுதிக எம்.எல்.ஏக்கள் தர்ணா
சென்னை: தமிழக சட்டசபையில் பட்ஜெட் உரையை புறக்கணித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட தேமுதிக எம்.எல்.ஏக்கள் கறுப்பு சட்டை அணிந்து சட்டசபை வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2015-16 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்தார்.

திமுகவினர் வெளிநடப்பு
அவை கூடியதும் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த உடன் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க திமுக எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தினர். ஆனால் அதற்கு சபாநாயகர், இன்றைய தினம் பட்ஜெட் மட்டும் தாக்கல் செய்யவேண்டும் என்று கூறினார். ஆனால் அதனை திமுக எம்.எல்.ஏக்கள் ஏற்கவில்லை. சபாநாயகரைக் கண்டித்து திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
தேமுதிகவிருக்கு சிக்கல்
இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் கடந்த மாதம் நடைபெற்றது. அப்போது, பேரவைத் தலைவருடன் தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரைத் தாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, தேமுதிகவினர் அனைவரும் பேரவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
விளக்கம் கேட்டு நோட்டீஸ்
பேரவையில் அவர்கள் நடந்து கொண்ட விதம் தொடர்பாக விவாதித்து நடவடிக்கை எடுப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க, அந்தப் பிரச்னை, அவை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தக் குழுவின் கூட்டம் கடந்த மாதம் நடைபெற்று தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் சிலருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

கருப்பு சட்டையுடன் தர்ணா
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்ற பேரவைக் கூட்டத் தொடரானது, இப்போது பட்ஜெட் கூட்டத் தொடர் வரை தொடர்கிறது. எனவே, தேமுதிக எம்.எல்.ஏ.க்களுக்கு விதிக்கப்பட்ட இடைநீக்க நடவடிக்கை பட்ஜெட் கூட்டத் தொடருக்கும் பொருந்தும். இதனால் தேமுதிக உறுப்பினர்கள் சட்டப்பேரவை வளாகத்தில் கருப்பு சட்டை அணிந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சபைக்கு வராத விஜயகாந்த்
தனது கட்சி எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க தேமுதிக தலைவர் விஜயகாந்த் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரும் இன்றைய தினம் சட்டசபைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications