நகராட்சி ஆணையரை மிரட்டிய திமுக மாவட்ட செயலாளர்.. ஆடியோ வெளியானது
நகராட்சி ஆணையரை திமுக மாவட்ட செயலாளர் மிரட்டும் ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
நெல்லை: நகராட்சி ஆணையரை திமுக மாவட்ட செயலாளர் மிரட்டும் ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இதில் திமுக மாவட்ட செயலாளர் நகராட்சி ஆணையரிடம் பணம் கேட்டு இருக்கிறார்.
நெல்லை மாவட்டத்திற்கு திமுகவின் துணை பொதுச்செயலாளர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதற்கான முன்னேற்ப்பாடுகளை திமுகவினர் செய்திருந்தனர்.

இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு திமுகவின் நெல்லை மாவட்ட புறநகர் செயலாளர் சிவபத்மநாபன் என்பவர் மு.க.ஸ்டாலின் வருகையை காரணம் காட்டி பலரிடம் பணம் வசூலித்துள்ளார். அவர் தென்காசி நகராட்சியின் ஆணையராக பணியாற்றும் யோகராஜ் என்பவரை அலைபேசியில் அழைத்துள்ளார்.
அவர் அந்த காலில் ''நீங்கள் 10 ஆயிரம் ரூபாய் கொடுக்க கூடாது. 50ஆயிரம் ரூபாய் கொடுங்கள்'' என்று கூறியுள்ளார். மேலும் ''ஆணையாளராகிய நீங்கள் ஆற்காட்டாருக்கு வேண்டியவர் என்பதால்தான் 50 ஆயிரம் கேட்பதாகவும், இல்லையென்றால் அதிகம் கேட்போம்'' என்றும் கூறியுள்ளார்.
மேலும் ''உங்களால் முடிந்தால் கொடுங்கள். நீங்கள் எந்த எந்த கட்டிடங்களுக்கு பணம் வாங்கினீர்கள் என்று பட்டியல்கள் என்னிடம் உள்ளது. அதை வெளியிட தயாராக இருக்கிறேன்'' என்றும் அவர் பேசியது வெளியாகியுள்ளது. ஏற்கனவே நெல்லை மாவட்ட திமுகவில் கோஷ்ட்டிபூசல் உருவாகியுள்ள நிலையில் இந்த பரப்பரப்பு ஆடியோ வெளியாகியுள்ளது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications