செங்கோட்டை- மதுரைக்கு கூடுதல் ரயில் இயக்க திமுக எம்.பி. கோரிக்கை!
செங்கோட்டை: செங்கோட்டை - மதுரை இடையே கூடுதல் ரயில் இயக்க வேண்டும் என திமுக எம்.பி. தங்கவேலு கோரிக்கை விடுத்துள்ளார்.
சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில், நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை திமுக எம்.பி. ச.தங்கவேலு, ரயில்வே பொது மேலாளர் ராகேஷ்சர்மா ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்போது, திமுக எம்.பி. ச.தங்கவேலு செய்தியாளர்களிடம் கூறியதாவது
சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என இரண்டு மாதங்களுக்கு முன்பு சங்கரன் கோவில் வந்த ரயில்வே மதுரை கோட்ட மேலாளரிடம் கோரிக்கை வைத்தேன். இதன் மூலம் சங்கரன் கோவில் ரயில் நிலையத்தில் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், இந்த ரயில் நிலையத்திற்கு தேவையானவற்றை ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் சர்மாவிடம் கோரிக்கையாக கூறியுள்ளேன்.செங்கோட்டை முதல் புனலூர் வரை நடைபெற்று வரும் அகல ரயில்பாதை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
அதே போல், செங்கோட்டை - மதுரைக்கு இடையே செல்லும் ரயிலை மக்கள் அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள். எனவே செங்கோட்டை, மதுரையிடையே கூடுதல் ரயில் இயக்க வேண்டும்.
செங்கோட்டை முதல் சிவகாசி வரை உள்ள பொதுமக்கள் பயன் பெறும் வகையில் அவர் கள் கோயம்புத்தூர் செல்ல ஏதுவாக, தூத்துக்குடி - கோவை ரயிலில் விருதுநகரில் இணைக்கும் வகையில் செங்கோட்டையில் இருந்து இணைப்பு ரயில் ஒன்று புதிய ரயில் இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைளை பொது மேலாளரிடம் கூறியுள்ளேன். அதை அவர் நிறைவேற்றி தருவதாக கூறியுள்ளார் என்றார்.
-
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ஸ்டாலின் வெள்ளந்தியாக இருந்து விட்டார்.. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் குறித்து திமுக நிர்வாகி பதிவு -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்!












Click it and Unblock the Notifications