ரூ500, ரூ1,000 நோட்டு செல்லாது அறிவிப்புக்கு வரவேற்பு... அவகாசமும் தந்திருக்க வேண்டும்: ஸ்டாலின்
ரூ500, ரூ1,000 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை வரவேற்பதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பை திமுக வரவேற்பதாகவும் ஆனால் பொதுமக்களுக்கு கால அவகாசம் தந்திருக்க வேண்டும் என்று அக்கட்சி பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்டாலின் கூறியுள்ளதாவது:
கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். ஆனால் மத்திய அரசின் அவசரமான இந்த அறிவிப்பால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னர் மக்களுக்கு சிரமமின்றி அவகாசத்தை வழங்கியிருக்க வேண்டும். மத்திய அரசு நேற்று ரயில் நிலையங்கள், மருத்துவமனைகள், பெட்ரோல் பங்குகள் ஆகியவற்றில் ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லும் என அறிவித்தது.
ஆனால் தற்போது ரூ500, ரூ1,000 நோட்டுகளை பெட்ரோல் பங்குகள், ரயில் நிலையங்கள் வாங்குவதில்லை.
மேலும் தேர்தலின் போது கருப்பு பணத்தை ஒழித்து ரூ15 லட்சத்தை வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்வோம் என அளித்த வாக்குறுதி என்னவாயிற்று? என்பது குறித்தும் விளக்க வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications