For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாகையில் திமுக வெற்றி..3 வது இடத்தில் சி.பி.ஐ, பாமக, காங். படுதோல்வி- நக்கீரன் சர்வே

By Mathi
|

சென்னை: நக்கீரன் வாரமிருமுறை இதழ் நடத்திய கருத்து கணிப்பில் நாகை லோக்சபா தொகுதியில் திமுக வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இத்தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 4வது இடமும் காங்கிரஸூக்கு 5வது இடமும்தான் கிடைக்குமாம்.

தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் குறித்து நக்கீரன் கருத்து கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில் நாகப்பட்டினம் லோக்சபா தொகுதியில் திமுக வேட்பாளர் விஜயன் மீண்டும் வெல்வார் என்று கூறப்பட்டுள்ளது.

DMK will win in Nagai

கீழ்வேளூர், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, திருவாரூரில் திமுக கை

நாகை தொகுதிக்குட்பட்ட கீழ்வேளூர், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர் சட்டசபை தொகுதிகளில் திமுக கை ஓங்கியுள்ளது.

திருத்துறைப்பூண்டியில் அதிமுகவுக்கு 3வது இடம்

திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2வது இடமும் அதிமுகவுக்கு 3வது இடமுமாக ஆதரவு உள்ளது.

நன்னிலம், நாகையில் அதிமுக

நன்னிலம் மற்றும் நாகப்பட்டினம் தொகுதிகளில் அதிமுகவுக்கு ஆதரவு உள்ளது.

சிபிஐக்கு 3, பாமகவுக்கு 4வது இடம்

இத்தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 3வது இடத்தை எட்டி பிடிக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் வடிவேல் ராவணன் 4வது இடத்துக்கு தள்ளப்பட்டு மோசமான தோல்வியை எதிர்கொள்கிறார்.

காங்கிரஸுக்கு டெபாசிட் கிடைக்காது போல

நக்கீரனின் முடிவுகளைப் பார்க்கும் போது நாகப்பட்டினத்திலும் காங்கிரஸ் கட்சிக்கு டெபாசிட் கிடைப்பது கஷ்டம்தான்.

English summary
DMK is leading in Nagai according to Nakkeeran survey. PMK faces wors defeat in Nagai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X