திருச்சியில் நாளை திமுக மகளிர் அணி மற்றும் பிரச்சாரக்குழு கூட்டம்
திருச்சி: திருச்சியில் திமுக மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு அங்கு மகளிர் அணி மற்றும் பிரச்சாரக்குழு கூட்டம் நாளை நடைபெறுகின்றது.
திமுக மகளிர் அணி மற்றும் தொண்டர் அணி மாநில நிர்வாகிகள் - மாவட்ட அமைப்பாளர்கள் பிரச்சாரக்குழு கூட்டம் நாளை (ஜனவரி 20ம் தேதி) காலை 10 மணிக்கு திருச்சி கலைஞர் அறிவாலயத்தில், திருச்சி மாவட்ட செயலாளர் கே.என்.நேரு தலைமையில் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்திற்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் எஸ்.பி.சற்குண பாண்டியன், மாநில மகளிர் அணி தலைவர் நூர்ஜகான் பேகம், மாநில மகளிர் அணி புலவர் இந்திரகுமாரி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
மேலும் மாநில மகளிர் அணி செயலாளர் புதுக்கோட்டை விஜயா வரவேற்புரையாற்ற மாநில மகளிர் தொண்டர் அணிச் செயலாளர் காரல்மார்க்ஸ் நன்றி கூறுகிறார்.
இந்த கூட்டத்தில் திமுக மாநாட்டில் மகளfர் அணி பங்கு குறித்தும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் மகளிர் அணி செயல்பாடுகள் குறித்தும் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.
இந்த கூட்டத்தில் மாநில மகளிர் அணி- மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.












Click it and Unblock the Notifications