Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கமலாலயத்தில் வைக்கப்பட்டுள்ள வாஜ்பாய் அஸ்தி கலசத்துக்கு ஸ்டாலின் மரியாதை

சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வைக்கப்பட்டுள்ள வாஜ்பாய் அஸ்தி கலசத்துக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    வாஜ்பாய் அஸ்தி கலசத்துக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மரியாதை- வீடியோ

    சென்னை: பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வைக்கப்பட்டுள்ள வாஜ்பாய் அஸ்தி கலசத்துக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

    முன்னாள் பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான வாஜ்பாய் கடந்த 16ந்தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

    அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

    அஸ்தி அடங்கிய கலசம்

    அஸ்தி அடங்கிய கலசம்

    இதனை தொடர்ந்து அவரது அஸ்தி நாடு முழுவதும் உள்ள ஆறுகளில் கரைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்காக பாஜக மாநில தலைவர்கள் அனைவரிடமும் அஸ்தி அடங்கிய கலசம் வழங்கப்பட்டு வருகிறது.

    வாஜ்பாய் அஸ்தி

    வாஜ்பாய் அஸ்தி

    நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் அஸ்தி அடங்கிய கலசத்தினை கட்சியின் மாநில தலைவர்களிடம் வழங்கினர்.

    அடல் கலச யாத்ரா

    அடல் கலச யாத்ரா

    தமிழகத்தின் சார்பில் தமிழிசை சவுந்தரராஜனிடம் பிரதமர் மோடி கலசத்தினை வழங்கினார். இந்த கலசங்கள் அடல் கலச யாத்ரா என்ற பெயரில் நாடு முழுவதுமுள்ள மாநில தலைநகரங்கள் மற்றும் அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.

    தமிழகத்தில் 6 இடங்களில்

    தமிழகத்தில் 6 இடங்களில்

    இதைத்தொடர்ந்து வாஜ்பாயின் அஸ்தி நாடு முழுவதும் உள்ள புனித ஆறுகளில் கரைக்கப்படும். தமிழகத்தில் கன்னியாகுமரி, ராமேஸ்வரம், மதுரை, திருச்சி, ஈரோடு மற்றும் சென்னை என 6 இடங்களில் அஸ்தி கரைக்கப்படுகிறது.

    கமலாலயத்தில் அஸ்தி

    கமலாலயத்தில் அஸ்தி

    இந்த கலசம் கொண்டு செல்லப்படும் பகுதிகளில் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அஸ்தி கலசம் வைக்கப்பட்டுள்ளது.

    வாஜ்பாய் அஸ்திக்கு ஸ்டாலின் மரியாதை

    வாஜ்பாய் அஸ்திக்கு ஸ்டாலின் மரியாதை

    இந்நிலையில் சென்னை தி நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்திக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மரியாதை செலுத்தினார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+