Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னையா கைது செய்றீங்க?.. நான் சொன்னால் அமைச்சர்கள் இங்கே வருவார்கள்.. சவுண்ட் விட்ட அஸ்வினி

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு: என்னையா கைது செய்கிறீர்கள், நான் சொன்னால் போதும் அமைச்சர்கள் இங்கே வந்துவிடுவார்கள் என அஸ்வினி போலீஸாரையே மிரட்டியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

மாமல்லபுரத்தில் உள்ள ஸ்தலசயன பெருமாள் கோயிலில் அன்னதாம் வழங்கப்பட்டு வருகிறது. இங்கு அன்னதானம் சாப்பிட பூஞ்சேரி கிராமத்தை சேர்ந்த நரிக்குறவ பெண் அஸ்வினி உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.

 Do you know How Narikurava woman Ashwini arrested by police?

ஆனால் அவர்களை கோயில் நிர்வாகத்தினர் பந்தியில் அமர வைக்காமல் கீழே தனியே இலை போட்டு அதில் அமர சொன்னதாக தெரிகிறது. இதையடுத்து அஸ்வினி என்பவர் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் ஸ்தல சயன பெருமாள் கோயிலில் நடந்த பாகுபாட்டை விவரித்தார்.

இது சமூகவலைதளங்களில் வைரலானது. இதையடுத்து கோயிலுக்கு சென்ற இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு அந்த பெண்ணையும் அவர் சமூகத்தினரையும் அழைத்து அன்னதானம் சாப்பிட்டார். முதல்வரின் உத்தரவின் பேரில் இந்த சம்பவம் கவன ஈர்க்கப்பட்டது.

இந்த நிலையில் நரிக்குறவர்களுக்கு உதவ தமிழக அரசு பல அறிவிப்புகளை வெளியிட்டது. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது தமிழக முதல்வர் ஸ்டாலின், பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்த 282 பேருக்கு வீட்டுமனை பட்டாக்கள், குடும்ப அட்டைகள், வாக்காளர் அட்டை, ஜாதி சான்றிதழ்கள வழங்கப்பட்டன.

இதையடுத்து நரிக்குறவர் இன பெண் அஸ்வினிக்கும் முதல்வர் கடனுதவி வழங்கினார். மேலும் சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளுக்கு முடிவு கட்டும் வகையில் முதல்வர் ஸ்டாலின் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று சாப்பிட்டார். அஸ்வினியின் குழந்தைகளை கொஞ்சினார்.

இதையடுத்து அஸ்வினியை நிறைய டிவி சேனல்கள் பேட்டி எடுக்கச் சென்றன. சமூகவலைதளங்களில் அஸ்வினி குறித்த பேச்சாகவே இருந்தது. இந்த நிலையில் இதை அஸ்வினி தனக்கு சாதகமாக்கிக் கொண்டார். வங்கிகளுக்கு சென்று கடன் கேட்டு மிரட்டியது, ஹோட்டல்களுக்கு சென்று சாப்பிட்டு காசு கொடுக்காமல் வருவது, கேட்டால் என் அரசியல் பேக்கிரவுண்ட் தெரியுமா என மிரட்டுவது, வியாபாரிகளிடம் காசு கொடுக்காமல் சாப்பிட்டுவிட்டு அவர்களையும் மிரட்டுவது, கேக் சாப்பிட்டுவிட்டு காசு கேட்டால் கேக்கே நல்லா இல்லை, இதுல காசு வேறயா என கேட்டுவிட்டு போவது என அடுக்கடுக்காக புகார்கள் வந்தன.

இந்த நிலையில்தான் கடற்கரை கோயில் அருகே கடை வைக்கும் தகராறில் அஸ்வினிக்கும் நந்தினிக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த அஸ்வினி, நந்தினியின் கையில் பேனா கத்தியால் கீறியதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின் பேரில் அஸ்வினியை கைது செய்ய போலீஸார் சென்றனர்.

அப்போது அவர்களிடம் அஸ்வினி நான் யார் தெரியுமா, என் அரசியல் பேக்கிரவுண்ட் தெரியுமா. நான் சொன்னால் போதும் அமைச்சர்கள் எல்லாம் இந்த இடத்திற்கு வந்துவிடுவார்கள், அப்படிப்பட்ட என்னையே கைது செய்ய வந்துவிட்டீர்களா என அஸ்வினி கேட்டதாக தெரிகிறது. இதையடுத்து மேலிடத்திற்கு தகவல் பறந்த நிலையில் யாராக இருந்தாலும் தவறு செய்திருந்தால் கைது செய்யுங்கள், நடவடிக்கை எடுங்கள் என உத்தரவு கிடைத்ததை அடுத்து அஸ்வினி கைது செய்யப்பட்டு திருக்கழுக்குன்றம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அஸ்வினி அழுது கொண்டே வந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+