வாக்கு எண்ணிக்கை நாளில் ஜெயலலிதா என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா?
சென்னை: 232 தொகுதிகளுக்கு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியாகின. நாடே முடிவுகளை எதிர்பார்த்திருந்த நிலையில், ஆட்சி நிலைக்குமா போகுமா என்ற சஸ்பென்ஸ் நீடித்த நிலையில், போயஸ் கார்டனில் எந்த பதற்றமும் இல்லாமல் இருந்துள்ளார் ஜெயலலிதா.
கட்சி தொண்டர்களும், அரசியலை கவனிப்போரும்கூட காலை 6 மணிக்கு முன்பே எழுந்து மீடியாக்கள் மீது கவனம் வைத்திருநத் நிலையில், வழக்கத்தைவிட சற்று தாமதமாகவே விழித்தெழுந்தாராம் ஜெயலலிதா.
வாக்கு எண்ணிக்கை 8 மணிக்கு தொடங்கிய நிலையில், 7 மணிக்குதான் எழுந்தாராம் அவர்.

பூஜை
இதன்பிறகு வழக்கத்தைவிட அதிக நேரம் பூஜையறையில் செலவிட்டுள்ளார். சுமார் அரை மணி நேரம் அவர், பூஜையில் இருந்துள்ளார்.

ஆங்கில சேனல்கள்
வாக்கு எண்ண ஆரம்பித்ததும், ஆங்கில சேனல்களை பார்த்துக்கொண்டிருந்தாராம். திருப்பூர் அருகே பிடிபட்ட 3 கன்டெய்னர் பணம் விவகாரத்தில் எழுந்த சர்ச்சையால் எதிர்பார்த்த சீட்டுகள் கிடைக்கவில்லை என்று உயர் அதிகாரி ஒருவரிடம் கமெண்ட் அடித்தாராம் ஜெயலலிதா.

எதிர்பார்த்தார்
இந்த வெற்றியை முன்கூட்டியே ஜெயலலிதா எதிர்பார்த்ததாக போயஸ்கார்டனில் உள்ள சிலர் நண்பர்களிடம் கூறி புழகாங்கிதம் அடைந்தார்களாம்.

அன்றே சிக்னல்
வாக்களிக்க வந்தபோது, யார் வெற்றி பெறுவார் என்று இன்னும் 2 நாளில் தெரியப்போகிறது என்று ஜெயலலிதா கூறியதும், தனக்கு கிடைத்த பாசிட்டிவ் தகவல்களை முன்வைத்துதான் என்கிறார்கள் விவரம் அறிந்தோர்.
அதேநேரம், திமுக தலைவர் கருணாநிதியோ, அதிகாலை 5 மணிக்கெல்லாம் எழுந்து, உடற்பயிற்சிகளை மேற்கொண்டுவிட்டு வாக்கு எண்ணிக்கையை பார்க்க ரெடியாக இருந்தாராம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications