Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. பறக்கும் ரெயிலில் போறீங்களா.. உயர்கிறது கட்டணம்.. வந்துடுச்சு அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரயில் பயணிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.. இதற்கான காரணத்தையும் ரயில்வே நிர்வாகம் வெளியிட்டிருக்கிறது.

சென்னையில் பறக்கும் ரெயில் திட்டம் கடற்கரையில் இருந்து மயிலாப்பூர் வரை முதல் கட்டமாக இயக்கப்பட்டது... பிறகு, வேளச்சேரி வரை இது நீட்டிக்கப்பட்டது. இதனால் பறக்கும் ரெயிலில் அதிக பயணிகள் பயணித்து வருகின்றனர்.
ஆரம்பத்தில் 6 பெட்டிகள் கொண்ட ரெயில் இயக்கப்பட்டது. பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமானதால், 9 பெட்டிகள் கொண்ட ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

வேளச்சேரி பரங்கிமலை: இதன் அடுத்தகட்டமாக வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை ரெயில் நிலையத்தை இணைக்கும் வகையில் 2007-ம் ஆண்டு 3 கி.மீ தூரத்துக்கு பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. இதில் வேளச்சேரி-புழுதிவாக்கம்-ஆதம்பாக்கம் வரை தூண்கள் அமைக்கப்பட்டு தண்டவாளம் பதிக்கப்பட்டது. ஆனால் ஆதம்பாக்கம்-பரங்கிமலை இடையே 600 மீட்டர் தூரத்துக்கு பணிகள் தொடங்குவதில் நிறைய சிரமங்கள் ஏற்பட்டன.

Do you know why flying train fares are increasing and whats the new announcement

அந்த வழி பாதையில் உள்ள வீடுகளுக்கு இழப்பீடு தொகை வழங்குவது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடந்து வந்ததால் கடந்த 11 ஆண்டுகளாக பணிகள் நடைபெறாமல் கிடப்பில் இருந்தது... பிறகு, கடந்த 2020-ல் எல்லா வழக்குகளும் முடித்து வைக்கப்பட்ட நிலையில் மறுபடியும் அங்கு பணிகள் ஆரம்பமாகின.. இப்போது ஆதம்பாக்கம்-பரங்கிமலை இடையே தூண்கள் அமைக்கப்பட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வரும்நிலையில், இந்த பணிகள் இன்னும் 3 மாதத்தில் முடிந்துவிடும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

பறக்கும் ரயில்கள்: அதேபோல, சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில் சேவையில், தினமும் 150 பறக்கும் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.. சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே 19 ரெயில் நிலையங்கள் உள்ளன.. ஆனால், பறக்கும் ரெயிலில் பயணம் செய்ய குறைந்த அளவிலேயே கட்டணம் அதாவது ரூ.5 மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் பறக்கும் ரெயில் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் ரூ.84.10 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே: தெற்கு ரெயில்வே பறக்கும் ரெயில் சேவைக்கு வருடந்தோறும் ரூ.100 கோடிக்கு மேல் செலவிடுகிறது.. இந்த பணம் ரெயில் இயக்கம், பராமரிப்பு, ஊழியர்களின் சம்பளம் போன்றவைகளுக்காக செலவிடப்படுகிறது.. பறக்கும் ரெயில் டிக்கெட் விற்பனை மூலம் தெற்கு ரெயில்வேக்கு கடந்த வருடம் ரூ.17.25 கோடி மட்டுமே வருமானம் கிடைத்துள்ளதாக தெரிகிறது..

அதனால்தான், பறக்கும் ரெயில் சேவையை தெற்கு ரெயில்வேயிடம் இருந்து கையகப்படுத்த தமிழக அரசு ஆலோசித்து வருவதாகவும், விரைவில் பறக்கும் ரெயில் சேவைகள் அனைத்தும் தமிழக அரசுக்கு மாறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், தற்போதுள்ள இழப்பை சரிக்கட்டும் சூழலும் ஏற்பட்டுள்ளது..

அதனால், பறக்கும் ரெயில் கட்டணத்தை உயர்த்த முடிவாகி உள்ளது.. இப்போதுள்ள 5 ரூபாயில் இருந்து 10 ரூபாயாக உயர்த்தி நிர்ணயிக்கப்பட உள்ளது.. மெட்ரோவை போலவே, பறக்கும் ரெயிலையும் தமிழக அரசு ஒரே நேரத்தில் கையகப்படுத்தினால் 150 ரெயில் பெட்டிகளை வாங்க வேண்டி உள்ளது.. அதன் விலை மட்டும் கிட்டத்தட்ட ரூ.140 கோடி ஆகும்.

தமிழக அரசு அதிரடி: எனவே, கையகப்படுத்த நடவடிக்கை அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் நிகழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது பறக்கும் ரெயில் சேவையை கையகப்படுத்த ரூ.500 கோடிக்கு மேல் செலுத்துவது குறித்து அரசு பரிசீலிக்கலாம் என்றும் தெரிகிறது. எப்படி பார்த்தாலும், பறக்கும் ரெயில் பயணிகளுக்கு சிறந்த வசதிகளை வழங்க வேண்டும் என்பதே அரசின் நோக்கமாக உள்ளதால், அதற்கான முன்னெடுப்புகளையும் விரைவில் தொடங்கலாம் என்கிறார்கள்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+