For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழிசையை பார்த்ததும் செல்ஃபி எடுக்காமல் சோபியா ஸ்லோகனை கையில் எடுத்தது ஏன்? #sophia

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தமிழிசையை பார்த்ததும் சோபியாவுக்கு கோபம் பீறிட்டு எழுந்தது ஏன்?

சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் நேற்று சோபியா என்ற ஆராய்ச்சி மாணவி பயணம் செய்தார். அதே விமானத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசையும் பயணம் செய்தார்.

அவரை பார்த்ததும் சோபியாவுக்கு கடுங்கோபம் வந்தது. இதையடுத்து தான் பாஜகவுக்கு எதிராக கோஷமிடப் போவதாக டுவிட்டரில் தகவல் தெரிவித்துவிட்டு பாசிச பாஜக அரசு ஒழிக என கோஷமிட்டார்.

கைது

கைது

இதனால் தமிழிசை கடுங்கோபம் அடைந்தார். பின்னர் அந்த மாணவியுடன் பறக்கும் விமானத்திலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து நேற்று மாலை அந்த மாணவியை கைது செய்தனர்.

நம்மால் அறிய முடிகிறது

நம்மால் அறிய முடிகிறது

இதற்கு அரசியல் அமைப்புகளும், மாணவர் அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சோபியா கைது செய்யப்பட்டது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்று கூறி வருகின்றனர். இதனிடையே சோபியா கோபமடைந்து கோஷமிட்டதற்கு என்ன காரணம் என்பதை நம்மால் அறிய முடிகிறது.

கோபம்

கோபம்

கனடாவில் ஆராய்ச்சி படிப்பு படித்தாலும் சோபியா தூத்துக்குடியை சேர்ந்தவர். தூத்துக்குடியில் மக்களுக்கு பாதகத்தை விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை ஏற்படுத்தியது, அதை கண்டித்து போராட்டம் நடத்திய மக்கள் நடத்தப்பட்ட விதம் ஆகியவற்றால் கோபம் அடைந்திருப்பார்.

கடுங்கோபம்

கடுங்கோபம்

மேலும் ஸ்டெர்லைட்டுக்காக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது காவல் துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதும் இதனால் 13 பேர் பலியானதும், இணையதளம் முடக்கம், விசாரணை என்ற பெயரில் போலீஸார் நடந்து கொண்ட விதம் ஆகியவற்றை பார்த்து சோபியாவுக்கு கடுங்கோபம் இருந்திருக்கும்.

முடிவுக்கு வரமுடியவில்லை

முடிவுக்கு வரமுடியவில்லை

இந்நிலையில் தமிழிசையை பார்த்த அவருக்கு கோபத்தை அடக்கமுடியாமல் பாஜகவுக்கு எதிராக வெடித்துள்ளதை நம்மால் உணர முடிகிறது. பெரும்பாலும் தமிழிசையை கண்டால் செல்பி எடுத்து கொள்வோர் மத்தியில் சோபியா வாக்குவாதம் செய்துள்ளார். எனினும் விமான நிலையத்தில் நடந்தது என்ன என்பது தெரியவில்லை. இதனால் சோபியா மீது குற்றம் இல்லை என்றும் தமிழிசையின் கோபம் நியாயமானது என்றும் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

மறுபரிசீலனை

மறுபரிசீலனை

பாஜக அரசுக்கு எதிராக மாணவி ஒருவர் துணிச்சலுடன் எதிர்ப்பை காட்டியது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இது தமிழகம் மட்டுமல்லாமல் இந்திய அளவில் மாணவிக்கு ஆதரவும் பாராட்டும் பெருகி வருவதை பார்க்கும் போது பாஜக அரசு செய்த தவறுகளை மறுபரிசீலனை செய்து திருத்திக் கொள்வது அக்கட்சிக்கும் அக்கட்சியை சார்ந்தவர்களுக்கும் நல்லதாகும்.

English summary
Here are reasons for why Sofhia gets angry on seeing Tamilisai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X