காதலிப்பதாக கூறி பலாத்காரம்.. உளுந்தூர்ப்பேட்டை டாக்டர் சென்னையில் கைது
சென்னை: சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் தன்னை பலாத்காரம் செய்துவிட்டதாக பெண் ஒருவர் அளித்த புகாரில் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த டாக்டரை சென்னை மடிப்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் செல்வி. இவர், உளுந்தூர்பேட்டை போலீசில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஒரு புகார் செய்தார்.

அதில், "கடந்த 2007 ஆம் ஆண்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் எனது தாயாருக்கு சிகிச்சை பெற சென்றேன். அங்கு உளுந்தூர்பேட்டையை சேர்ந்த இஸ்ரேல் என்பவர் பயிற்சி டாக்டராக இருந்தார். அடிக்கடி சந்தித்ததால் எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. நாங்கள் தனிமையில் அடிக்கடி சந்தித்து பேசி இருக்கிறோம்.
ஆனால் அவர், என்னை ஏமாற்றி விட்டு கேரளாவை சேர்ந்த வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிய டாக்டர் இஸ்ரேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறி இருந்தார்.
இந்த வழக்கு உளுந்தூர்பேட்டையில் இருந்து சென்னை மடிப்பாக்கம் மகளிர் போலீசாருக்கு மாற்றப்பட்டது. மடிப்பாக்கம் உதவி கமிஷனர் லட்சுமி நாராயணன் மேற்பார்வையில் மடிப்பாக்கம மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
தற்போது டாக்டர் இஸ்ரேல், ஆந்திராவில் பணியாற்றி வருகிறார். இதற்கிடையில் சென்னை வந்த டாக்டர் இஸ்ரேலை, மடிப்பாக்கம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications