ராம்குமார் பிரேத பரிசோதனை… தயார் நிலையில் நீதிபதியும் மருத்துவக் குழுவும்
சென்னை: ராம்குமாரின் பிரேத பரிசோதனையின் போது முன்னிலை வகிக்க வேண்டிய 4 பேர் கொண்ட மருத்துவக் குழுவும் நீதிபதி தமிழ் செல்வியும் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் தயார் நிலையில் உள்ளனர்.

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார் ராம்குமார். திடீரென அவர் மின் கம்பியை வாயால் கடித்து தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசாரால் தெரிவிக்கப்பட்டது. இந்த மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால் பிரேத பரிசோதனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ராம்குமாரின் தந்தை பரமேஸ்வரன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 3 மருத்துவர் கொண்ட குழு ஒன்றின் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனையடுத்து இன்று காலை 8 மணி அளவில் ராம்குமாரின் பிரேத பரிசோதனை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, 4 பேர் கொண்ட மருத்துவ குழுவும், நீதிபதி தமிழ்செல்வியும் ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு வந்து ராம்குமாரின் பிரேத பரிசோதனையை பார்வையிட தயாராக உள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை, தங்களது மருத்துவர் ஒருவர் பிரேத பரிசோதனையின் போது இருக்க வேண்டும் என்றும் தடயவியல் நிபுணர் ஒருவரும் உடன் இருக்க வேண்டும் என்றும் புதிய மனு ஒன்றை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் தற்போது ராம்குமாரின் பிரேத பரிசோதனை தள்ளிப் போடப்பட்டுள்ளது. பிற்பகலுக்கு பின்னர்தான் பிரேத பரிசோதனை எப்போது நடக்கும் என்பது தெரிய வரும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications