ஹெல்த் செக்அப் மோசடி என்று விஜய் சொன்னதை நீக்க வேண்டும் - மருத்துவர்கள் போர்க்கொடி
வட இந்தியர்கள் பலரும் ரயில் மூலம் சென்னை அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறுவதாக மருத்துவ சங்கம் கூறியுள்ளது. இயக்குநர் அட்லி அரைவேக்காட்டு தனமாக வசனம் எழுதியுள்ளதாக மருத்துவ சங்கத்தினர் கூறியுள்
சென்னை: அரைவேக்காட்டு தனமாக அட்லீ வசனம் எழுதியுள்ளார். மருத்துவர்கள் குறித்து விஜய் கூறியுள்ள கருத்துக்களை நீக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று மருத்துவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
நடிகர் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியான மெர்சல் திரைப்படம் ரிலீஸ் முதல் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.

ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா குறித்த வசனங்களை நீக்க வேண்டும் என்று தமிழக பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜகவைத் தொடர்ந்து இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு பிரிவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் நல்ல சேவை இல்லை என்பதால் தனியர் மருத்துவமனைகளுக்கு மக்கள் செல்கின்றனர் என்றும், பணம் சம்பாதிப்பதற்காகவே டாக்டர் தொழிலை மருத்துவர்கள் பயன்படுத்துகின்றனர். ஹெல்த் செக்அப் என்பது மோசடி என்றும் கூறுவார் விஜய்.
5 ரூபாய் டாக்டர் என்றுதான் அந்த படத்தில் விஜய்க்கு பெயரே. அதோடு அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சைகளைப் பற்றியும் விமர்சனம் செய்திருப்பார் விஜய். இதனிடையே நடிகர் விஜய் கருத்துக்கு அரசு மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர்கள், நடிகர் விஜய் மருத்துவ செக்அப் செய்து கொண்டதே இல்லையா? என்று கேட்டனர். சர்ச்சைக்குரிய வசனத்தை படத்தில் இருந்து நீக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் கூறினர்.
தமிழகம் முழுவதும் இலவசமாக தரமாக சிகிச்சை தரும் அரசு மருத்துவமனைகள் இருப்பது கண்ணுக்கு தெரியவில்லையா? என்று கேட்ட மருத்துவர்கள், தமிழகத்தில் தரமான சிகிச்சை அளிக்கப்படுவதனால்தான் வட இந்தியாவில் இருந்து தமிழகத்திற்கு ரயில் மூலம் சிகிச்சை பெற வருகின்றனர் என்றார்.
அரைவேக்காட்டு தனமாக அட்லீ வசனம் எழுதியுள்ளார். மருத்துவர்கள் குறித்து விஜய் கூறியுள்ள கருத்துக்களை நீக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
-
அடித்து ஆடும் விஜய்! லஞ்சம் வாங்குனா காலி! சென்னை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
எதிர்க்கட்சிகள் தீர்ந்து போன சக்தி சரி.. அப்போ நீங்க? விஜய்யை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய வேல்முருகன் -
விஜய்க்கு 25 நாள் ஆச்சு.. முதல் ஒப்பந்தம்.. 3 இடத்தில் 3 மெகா திட்டம்.. L&T நிறுவனம் ரூ.18600 கோடி முதலீடு! -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி










Click it and Unblock the Notifications