சென்னையில் மாடியிலிருந்து நாயை தூக்கி வீசிய கொடூர மாணவர்களுக்கு அதிகபட்ச அபராதம்! எவ்வளவு தெரியுமா?
சென்னை: சென்னை, குன்றத்தூரில் 4வது மாடியில் இருந்து நாய் குட்டியை ஒருவர் கீழே தூக்கி வீசும் வீடியோ காட்சி கடந்த ஜுலை மாதம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து விசாரணையில் மாடியில் இருந்து நாயை தூக்கி வீசியவர் திருநெல்வேலியைச் சேர்ந்த கவுதம்சுதர்சன் (வயது 22) என்றும், அந்தக்காட்சியை செல்போனில் படம் பிடித்தவர் அவரது நண்பரான நாகர்கோவிலை சேர்ந்த ஆசிஸ்பால் என்பதும் தெரியவந்தது.

இவர்கள் இருவரும் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவ மாணவர்கள் ஆவார்கள். இந்நிலையில் இவர்களின் பெற்றோரே அவர்களை போலீஸில் ஒப்படைத்தனர். இதையடுத்து மாணவர்கள் இருவரும் ஸ்ரீபெரும்பதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனிடையே அவர்கள் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர்.
இதனிடையே சென்னை உயர்நீதிமன்றம் கூறிய உத்தரவில், எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழம், நாயை தூக்கி வீசிய இரண்டு மாணவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றும், அபராதத் தொகையை பல்கலைக்கழகமே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்ருந்தது.
இதனைத்தொடர்ந்து மருத்துவ மாணவர்கள் கவுதம்சுதர்சன், ஆசிஸ்பால் உள்ளிட்ட இருவருக்கும் தலா ரூ.2லட்சம் அபராதம் விதித்து சென்னை எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. இந்த தொகை அகில இந்திய விலங்குகள் நலவாரியத்திற்கு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
விலங்குகள் துன்புறுத்தல் தொடர்பான வழக்குகளில் விதிகப்பட்ட அபராதங்களில் இதுவே அதிகபட்ச அபராதம் என்று கூறப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் மாணவர்களுக்கு எதிராக கடும் கொந்தளிப்பு ஏற்பட்டதே இந்த அபாரதத்திற்கு காரணம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications