எதையும் செய்யாதது தான் இந்த அம்மாவின் சாதனையே: மிஸஸ் கேப்டன்
திருச்சி: எந்த நலப் பணிகளையும் செய்யாதது தான் அதிமுக அரசின் சாதனை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் அவர் திருச்சியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜயகுமாருக்கு ஆதரவாக புதுக்கோட்டையில் பிரச்சாரம் செய்தார்.

முத்துக்குமரன்
இந்தம்மா ஜெயலலிதா என்னத்த செஞ்சிட்டாங்க. இந்த தொகுதியில் போட்டியிட்டு நல்ல பெயர் எடுத்த கம்யூனிஸ்ட் தோழர் முத்துக்குமரன் விபத்தில் சிக்கி உயிர் இழந்தார். அவருக்கு பதிலாக இந்த தொகுதி கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கொடுக்கப்படவில்லை.

பேருந்து நிலையம்
கந்தர்வகோட்டையில் அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு சொந்தமான நிலத்தின் மதிப்பை உயர்த்த அரசு கட்டும் பேருந்து நிலையத்தை சுடுகாட்டில் கட்டுவது சரியா?

சாதனை
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் என்ன நிலையில் இருக்கின்றது என்று மக்களே உங்களுக்கே நன்றாக தெரியும். எந்த நலப்பணிகளையும் செய்யாதது தான் அதிமுக அரசின் சாதனை என்றார் பிரேமலதா.

லேட்
பிரச்சாரத்திற்கு வருகிறேன் என்று கூறிய நேரத்தில் பிரேமலதா வரவில்லை. அவர் வருவார் என்று எதிர்பார்த்து தேமுதிக தொண்டர்கள் சாலையோரம் உட்கார்ந்து காத்திருந்தார்கள்.

கலை நிகழ்ச்சி
பிரேமலதாவை எதிர்பார்த்து காத்து காத்து களைப்பாகி வந்தவர்கள் கிளம்பிவிடுவார்களோ என்று நினைத்து அவர்களை அங்கேயே இருக்க செய்ய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

இரவு
கலை நிகழ்ச்சிகள் எல்லாம் நடத்தப்பட்ட பிறகு பிரேமலதா சாவகாசமாக இரவு நேரம் பிரச்சாரத்திற்கு வந்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications