இதை எம்ஜிஆர் பார்த்தா செத்துருவாரு!
சுப்ரீம் கோர்ட் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டுள்ளதால் இதுபோன்ற "அரிய" கலைகள் அழிந்து வருகின்றன!
சென்னை: சாலையோரத்தில் குடித்து விட்டு 2 பேர் எம்.ஜி.ஆர். பாட்டுக்கு ஆடும் வீடியோவை வாட்ஸ் ஆப்பில் போட்டு கலாய்த்துள்ளனர். அது வைரலாகப் பரவி வருகிறது.
சுப்ரீம் கோர்ட் சாலையோர மதுக்கடைகளை மூட உத்தரவிட்டுள்ளதால் இதுபோன்ற "அரிய" கலைகள் அழிந்து வருகின்றன. எதிர்காலத்தில் இதுபோன்ற கலைகள் இல்லாமல் போய்விடும் நிலை உருவாகியுள்ளது என்றும் மக்கள் கலாய்க்கின்றனர்.

எம்ஜிஆர் படத்தில் இடம் பெற்ற நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி பாடலுக்கு போதை தலைக்கு ஏறிய நிலையில் யாரையும் கண்டுகொள்ளமல் இரண்டு மொடா குடிமகன்கள் ஆட்டம் போடுகின்றனர். எதைப் பற்றியும் கவலைப்படாமல் எம்ஜிஆரின் பிரத்யோக டான்ஸ் ஸ்டேப்பையும் போட்டு கலக்குகின்றனர்.
மதுக்கடைகள் மொத்தமாக மூடப்பட்டால் இதுபோன்ற அரிய கலைகளை நாம் இழந்துவிடுவோமோமா?! அதை விட இந்தப் பாட்டு இப்போது மட்டும் எம்ஜிஆர் உயிரோடு இருந்திருந்தால் கேட்டால் தலையில் அடித்துக் கொண்டிருப்பார்.
வாட்ஸ்அப்பில் வலம் வரும் அந்த வீடியோ இதோ..
இதை எம்ஜிஆர் பார்த்தா செத்துருவாரு! https://t.co/Lkt8LyivKG pic.twitter.com/NZcLvmVVqH
— Oneindia Tamil (@thatsTamil) May 12, 2017


Click it and Unblock the Notifications
