தாதா ஸ்ரீதர் மாரடைப்பால் மரணமடைந்தாரா? பிரேத பரிசோதனை அறிக்கையால் சர்ச்சை
சென்னை: கம்போடியாவில் தற்கொலை செய்து கொண்ட தாதா ஸ்ரீதர் மாரடைப்பால் மரணமடைந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் சாராய வியாபாரியும் தாதாவுமான ஸ்ரீதர் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கடந்த அக்டோபர் 4 -ந் தேதி தாதா ஸ்ரீதர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது வழக்கறிஞர் புருஷோத்தமனுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து வழக்கறிஞருடன் கம்போடியா விரைந்த ஸ்ரீதரின் மகள் அவரது உடலை அடையாளம் காட்டினார். ஆனால் அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டுவரமுடியாத சூழல் ஏற்பட்டது.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீதரின் மகள் வழக்கு தொடர்ந்திருந்தார். இதையடுத்து ஸ்ரீதர் உடலை இந்தியாவுக்கு கொண்டுவர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனடிப்படையில் ஸ்ரீதரின் உடல் சென்னை விமான நிலையத்துக்கு நேற்று வந்தடைந்தது. இருப்பினும் சில ஆவணங்களில் இருந்த பிரச்சனையால் சுமார் 7 மணிநேரம் ஸ்ரீதர் உடல் விமான நிலையத்திலேயே வைக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து ஆவணங்கள் அனைத்தும் ஒப்படைக்கப்பட்ட நிலையில் ஸ்ரீதரின் உடலை விமானநிலைய கார்கோ அதிகாரிகள் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து பிரேத பரிசோதனை மற்றும் டி.என்.ஏ பரிசோதனை செய்து முடிப்பதற்காக ஸ்ரீதர் உடல் செங்கல்பட்டு அரசுமருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் தாதா ஸ்ரீதர் மாரடைப்பால் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் தாதா ஸ்ரீதர் மாரடைப்பால் இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications