நான் ஜல்லிக்கட்டு நாயகனா? காளையை அடக்க சொன்னால் என்பாடு திண்டாட்டம்தான்.. காமெடி செய்த ஓபிஎஸ்!
தன்னை ஜல்லிக்கட்டு நாயகன் என அழைக்க வேண்டாம் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக உறுப்பினர்களுக்கு அன்பு கட்டளையிட்டுள்ளார்.
Recommended Video

சென்னை: தன்னை ஜல்லிக்கட்டு நாயகன் என அழைக்க வேண்டாம் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக உறுப்பினர்களுக்கு அன்பு கட்டளையிட்டுள்ளார்.
தமிழக சட்டசபை இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று கூடி நடைபெற்று வருகிறது. இதில் நான்கு நாட்களாக சட்டசபையை புறக்கணித்த திமுக உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. முன்னதாக ஸ்டெர்லைட் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து கார சார விவாதம் நடைபெற்றது.

நகைச்சுவை
இந்நிலையில் சட்டசபையில் இன்று பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மிகவும் சுவாரசியமாகவும் நகைச்சுவையாகவும் பேசினார்.

அவசரச்சட்டம்
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்வராக பொறுப்பேற்ற தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் இயற்றி மத்திய அரசின் ஒப்புதல் பெற்றார்.

செல்லமாக அழைப்பு
இதைத்தொடர்ந்து அவரது ஆதரவாளர்களும் அதிமுக உறுப்பினர்களும் ஓ.பன்னீர்செல்வத்தை ஜல்லிக்கட்டு நாயகன் என செல்லமாக அழைத்து வருகின்றனர்.

அன்பு கட்டளை
இந்நிலையில் இன்றைய சட்டசபை கூட்டத்தில் தன்னை ஜல்லிக்கட்டு நாயகன் என அழைத்த உறுப்பினருக்கு,
என் பெயரை சொல்லி அழைக்கும்போது ‘ஜல்லிக்கட்டு நாயகன்' என கூற வேண்டாம் என அன்பு கட்டளையிட்டார் ஓபிஎஸ்.

என்பாடு திண்டாட்டம்தான்
ஜல்லிக்கட்டு பார்க்கும்போது ஜல்லிக்கட்டு நாயகன் எனக்கூறி காளையை அடக்கச்சொன்னால் என்னவாகும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். காளையை அடக்கச் சொன்னால் என்பாடு திண்டாட்டம் ஆகிவிடும் என ஓ.பி.எஸ் நகைச்சுவையாக பேசினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications