இரட்டை இலைச்சின்னம் வைத்திருந்தால் நேர்மையானவர்களா? விளாசும் தினகரன்!
இரட்டை இலைச்சின்னம் வைத்திருந்தால் நேர்மையானவர்களா என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை: இரட்டை இலைச்சின்னம் வைத்திருந்தால் நேர்மையானவர்களா என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் காலை முதலே ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் இன்று பகல் 12 மணிக்கு ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளதாக தெரிவித்தார். மேலும் யார் துரோகிகள், யார் நம்பிக்கை துரோகிகள் என்றும் மக்களுக்கு தெரியும் என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தில் நடைபெறுவது மக்கள் விரோத அரசாங்கம் என்றும் டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார். இரட்டை இலைச்சின்னம் வைத்திருந்தால் நேர்மையானவர்களா என்றும் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பினார்.
அண்மையில் தேர்தல் ஆணையம் இரட்டை இலைச்சின்னம் மற்றும் கட்சியை ஓபிஎஸ் ஈபிஎஸ் தரப்புக்கு வழங்கியது. இதனை எதிர்த்து டெல்லி ஹைகோர்ட்டில் டிடிவி தினகரன் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications