For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இவ்வளவு கஷ்டப்பட்டு வாங்கியும் ஆர்கே நகரில் இரட்டை இலை எடுபடாமல் போனது ஏன்?

ஆர்கே நகரில் இடைத்தேர்தலில் தற்போதுவரை உள்ள நிலவரப்படி இரட்டை இலைச்சின்னம் இரண்டாவது இடத்தில் தான் உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    முதல் சுற்றிலேயே தினகரன் முன்னிலை... உற்சாகத்தில் ஆதரவாளர்கள்- வீடியோ

    சென்னை: ஆர்கே நகரில் இடைத்தேர்தலில் தற்போதுவரை உள்ள நிலவரப்படி இரட்டை இலைச்சின்னம் இரண்டாவது இடத்தில் தான் உள்ளது. இரட்டைஇலை சின்னம் கிடைத்தும் அதிமுக சோபிக்க முடியாத நிலையில் உள்ளது.

    இரட்டை இலைச்சின்னத்தை பெற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பெரும் பாடுபட்டனர். தினகரன், தீபா என பலரும் இரட்டை இலைக்கு சொந்தம் கொண்டாடிய நிலையில் கடந்த மாதம் தேர்தல் ஆணையம் இரட்டை இலைச்சின்னத்தை முதல்வர் அணிக்கு வழங்கியது.

    மறைந்த முதல்வர் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட அதிமுகவின் வெற்றிச்சின்னமான இரட்டை இலையையும் கட்சியையும் பெற்ற குதூகலிப்பில் இருந்தது அதிமுக.

    நம்பிய முதல்வர் அணி

    நம்பிய முதல்வர் அணி

    இரட்டை இலைச்சின்னத்தை வழங்கிய கையோடு ஆர்கே நகர் இடைத்தேர்தலையும் அறிவித்தது தேர்தல் ஆணையம். இதனால் எப்படியும் வெற்றி நமதே என இருந்தது முதல்வர் அணி.

    இலையை விரட்டிய டிடிவி

    இலையை விரட்டிய டிடிவி

    ஆர்கே நகர் தேர்தல் பிரச்சாரத்தின் போதும் இரட்டை இலையை மையப்படுத்தியே பிரச்சாரம் செய்தது. இந்நிலையில் சுயேச்சை வேட்பாளராக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரன் பல தேர்தல்களை கண்ட இரட்டை இலை மற்றும் உதய சூரியன் சின்னங்களை பின்னுக்கு தள்ளி முன்னிலை வகிக்கிறார்.

    ஓரம்கட்டப்பட்ட இரட்டைஇலை

    ஓரம்கட்டப்பட்ட இரட்டைஇலை

    தமிழகத்தில் எம்ஜிஆர் காலத்திலும் சரி ஜெயலலிதா காலத்திலும் சரி அடுத்தடுத்து 2 முறை தொடர்ந்து ஆட்சியை கைப்பற்றிய பெருமை இரட்டை இலை சின்னத்துக்கு உண்டு. அப்பேற்பட்ட இரட்டை இலைச்சின்னம் ஆர்கே நகரில் ஓரம் கட்டப்பட்டுள்ளது.

    பலன் கிடைக்குமா?

    பலன் கிடைக்குமா?

    எம்ஜிஆர், ஜெயலலிதா என இரண்டு பெரும் முதல்வர்களை கொடுத்த இரட்டை இலை சின்னம் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் எடுபடாமல் போனது. இவ்வளவு கஷ்டப்பட்டு சின்னத்தை பெற்றும் இரட்டை இலையால் அதிமுகவுக்கு பலன் கிடைக்காமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    English summary
    Double leaf symbol is not shine in RK Nagar by poll. Double leaf symbol gave ruling for ADMK two consecutive times at two times in TN assembly election.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X