6 மாதத்தில் கசந்த காதல் - வரதட்சணை கொடுமையால் தீக்குளித்து உயிரிழந்த பத்மா

காதலித்து திருமணம் செய்த கணவன் பணம், நகை கேட்டு கொடுமை படுத்தியதால் 6 மாதத்தில் இளம் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுளளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மேலும் ஒரு பெண் கணவனின் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்

    துத்துக்குடி: காதல் திருமணம் செய்து கொண்ட 6 மாதத்தில் கணவன் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதால் இளம் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    துத்துக்குடி மாவட்டம் தேய்குளம் அருகில் உள்ள பெருமாள்குளத்தை சேர்ந்த சிவபெருமாளின் மகள் பத்மா என்ற பத்திரகாளி, 21.

    அதே ஊரைச்சேர்ந்த மோகன்ராஜ் என்பவரை காதலித்து பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார்.

     வரதட்சணை கேட்ட மாமியார்

    வரதட்சணை கேட்ட மாமியார்

    திருமணம் முடிந்து 6 மாதங்களே ஆன நிலையில் நேற்று பத்மா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதற்குக் காரணம் கணவன் வீட்டார் 20 பவுன் நகையும், ஒரு லட்சம் ரூபாய் பணமும் கேட்டு கொடுமைபடுத்தியதுதான் என்று பத்மா கடிதம் எழுதி வைத்துள்ளார்.

     கொடுமை செய்த கணவன்

    கொடுமை செய்த கணவன்

    வீட்டை விட்டு ஓடிபோய் திருமணம் செய்து கொண்ட போது பாசமாக இருந்த கணவன், திடீரென வேறு ஒரு பெண்ணிடம் செல்போனில் பேசினார். இதனை தான் கண்டிததற்கு மோகன்ராஜின் அம்மா பத்மாவை தரக்குறைவாக திட்டினார். கணவரும் அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

     20 சவரன் நகை

    20 சவரன் நகை

    அந்த பெண்ணிடம் பேசுவதை கணவர் மோகன்ராஜ் தொடரவே, புதுமணப்பெண் பத்மா மனமுடைந்தார். தனது மகனுக்கு வேறு பெண் பார்த்து திருமணம் செய்து வைத்திருந்தால் ரூ.1 லட்சம் பணம் ரொக்கமாகவும், 20 சவரன் நகையும வரதட்சணையாக கிடைத்திருக்கும் என்று திட்டிய மோகன்ராஜின் தாயார், வீட்டில் இருந்து அடித்து விரட்டினர்.

     விரட்டி விட்ட கணவர்

    விரட்டி விட்ட கணவர்

    எவ்வளவோ கெஞ்சி கேட்டும் வீட்டுக்குள் விடாமல் காதல் மனைவி என்றும் பார்க்காமல் அடித்து விரட்டியுள்ளனர். தனக்காக நியாயம் கேட்க வந்த தந்தையையும், சகோதரரையும் அடித்ததோடு, போலீசார் பிடித்து சென்றனர். இதனாலேயே தான் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு தள்ளப்பட்டதாக கடிதம் எழுதி வைத்து விட்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் பத்மா.

     போலீஸ் வழக்குப் பதிவு

    போலீஸ் வழக்குப் பதிவு

    தனது மரணத்திற்கு தனது கணவர் மோகன்ராஜூம், அவரது தாயாரும்தான் காரணம் என்றும் அவர்களை கைது செய்யுங்கள் என்றும் தவறு செய்யாத என்னுடைய சகோதரரையும், தந்தையையும் விட்டுவிடுங்கள் என்று எழுதியுள்ளார். சாத்தான்குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+