பாஜகவில் சேர்ந்த கையோடு உறங்கிக் கிடந்த கவிதாயினியை வெளியே எடுத்து விட்ட ஜெமீலா!
சென்னை: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தவரான டாக்டர் ஜெமீலா தனது முதல் கவிதையை வெளியுலகுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சியின் மகளிர் அணியில் செயல்பட்டு வந்த ஜெமீலா மற்றும் பல முக்கியஸ்தர்கள் சமீபத்தில்தான் சரத்குமாரின் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனர்.
பன்முகம் கொண்டவராக தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் ஜெமீலா தனக்குள் இருக்கும் கவிதாயினியை முதல் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறி தனது முகநூலில் ஒரு கவிதையை வெளியிட்டுள்ளார். அது...
இதுவரை என் நெருங்கிய உறவுகள் மட்டுமே அறிந்த, எனக்குள் இருக்கும் கவிதாயினியை நான் முதன்முறையாக உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறேன்.

என்னுள் உறங்கிய பாரதியை
மெல்லென தட்டி எழுப்பிவிட்டேன்.
எழுந்தவன் எழுச்சியை எனக்களித்து
எழுதிடச் சொன்னான் கவிதனையே
என்னென்றெழுத.
நான் ஏதென்றெழுத.
திகைத்த என்னை முறைத்த அவனே
பெண்ணின் விடுதலை பாடச்சொன்னான்.
நாடே விடுதலையான பிறகு
பெண்ணுக்கொரு தனி
விடுதலை உண்டோ
என்றே கேட்டேன்.
வீறுகொண்டவன் கூறிய வரிகளில் கூர்மை இருந்ததை நானறிந்தேன்.
அழகிய பெண்ணுக்கு அழகே எதிரி.
அறிவில் சிறந்தால்
அறிவும் எதிரி
ஆளுமை கொண்டால்
அதுவும் எதிரி.
சிரித்தே பழக உறவும் எதிரி
எத்திசை நோக்கினும் எதிரியே உனக்கு
முழுதாய் சுதந்திரம்
கிடைத்ததா உனக்கு.
தீயெனும் கேள்வியில் அறிவினைச் சுட்டான்.
தீஞ்சுவை தமிழ்தனில்
மனதினை தொட்டான்.
உண்மைதானே
கூறடி பெண்ணே.
இந்நிலைக் காரணம் யாரடி பெண்ணே.!
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications