சுதீஷ் போட்டியிடத் திட்டமிட்டுள்ள கள்ளக்குறிச்சியில் வேட்பாளரை அறிவித்தார் ராமதாஸ்!
தர்மபுரி: தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மச்சான் சுதீஷ் போட்டியிடத் திட்டமிட்டுள்ள கள்ளக்குறிச்சி தொகுதியில் தனது கட்சி சார்பில் ஆத்தூர் சண்முகம் போட்டியிடுவார் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அதிரடியாக அறிவித்துள்ளார்.
டாக்டர் ராமதாஸின் இந்த அதிரடி அறிவிப்பால் தேமுதிகவினர் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக, கடும் நெருக்கடி கொடுத்து கள்ளக்குறிச்சியை வாங்கி வைத்துள்ளது.
ஆனால் இந்தத் தொகுதியில் தற்போது தனது கட்சி போட்டியிடும் என்று டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இதனால் பரபரப்பு கூடியுள்ளது.

நேற்று தர்மபுரியில் நடந்த அன்புமணி ராமதாஸ் அறிமுகக் கூட்டத்தின்போது, கள்ளக்குறிச்சியில் பாமக போட்டியிடும் என்றும் அதன் வேட்பாளராக ஆத்தூர் மணியன் அறிவிக்கப்படுவதாகவும் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
இந்த்த தொகுதியில் தனது மச்சான் சுதீஷை நிறுத்த விஜயகாந்த் முடிவு செய்திருப்பதாக ஏற்கனவே பலமான பேச்சு இருந்து வந்தது. அதன் எதிரொலியாக பேச்சுவார்த்தையின்போதும் கள்ளக்குறிச்சி கண்டிப்பாக தேவை என்று பேசி வந்தது தேமுதிக.
இதே தொகுதியை பாமகவும் கேட்டு வந்தது. ஆனால் தேமுதிகவுக்கே இத்தொகுதியை ஒதுக்கியது பாஜக. இதே போல மேலும் சில தொகுதிகளையும் பாஜக, தேமுதிகவுக்கே முன்னுரிமை கொடுத்ததால்தான் பாமக கடும் கோபமடைந்து தற்போது மொத்தம் 12 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அறிவித்து விட்டது
சேலம்- திருவண்ணாமலையிலும் போட்டி
நேற்று நடந்த தர்மபுரி கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசுகையில், ஆத்தூர் சண்முகம் கள்ளக்குறிச்சி வேட்பாளர். பெரும் ஓசை எழுப்பும் மணியோசை திருவண்ணாமலையிலும் எதிரொலிக்கட்டும். எதிரொலி மணியன் திருவண்ணமலை வேட்பாளர். அருள் சேலம் வேட்பாளர்.
உனக்கேன் கலக்கம். தயக்கம். உன் உழைப்பு வீண்போகாது. உங்களை வெற்றி பெற செய்ய கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உழைப்பார்கள் என்றார் டாக்டர் ராமதாஸ்.
டாக்டர் ராமதாஸின் இந்தப் பேச்சு பாமகவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதேசமயம், தேமுதிகவினரை டென்ஷனாக்கியுள்ளது. பாஜகவை பெரும் கவலையில் மூழ்கடித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications