முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது குறித்து ஆராய அனுமதிப்பதா?: மத்திய அரசுக்கு ராமதாஸ் கண்டனம்!
சென்னை: முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் தரம் குறித்து ஆய்வு செய்ய அனுமதித்துள்ள மத்திய அரசுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வேலூரில் டாக்டர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட கேரள அரசுக்கு அனுமதி அளிக்ககூடாது என தமிழக அரசு போராடி வருகிறது. ஆனால் புதிய அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது கண்டிக்கதக்கது.

தமிழ்நாட்டில் நேற்று முதல் மின் கட்டணம் உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது. இது சட்ட விரோதமானது. கட்டண உயர்வை அறிவித்த தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் பொம்மை அமைப்பு. பொம்மை அமைப்பை உருவாக்கி தங்களது விருப்பத்திற்கு ஏற்ப தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
இதனை ஏற்க முடியாது. மின் கட்டணத்தை உயர்த்த ஒழுங்கு முறை ஆணையத்திற்கு அதிகாரமில்லை. மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். பொம்மை அமைப்பை கலைக்க வேண்டும். அதற்கு பதில் பணியில் இருக்கும் கண்டிப்பான நீதிபதியை மின்சார ஒழுங்கு முறை ஆணைய தலைவராக நியமிக்க வேண்டும்.
இந்தியாவில் மத மாற்ற தடை சட்டம் கொண்டு வரக்கூடாது. அது பொடா, தடா போன்று தவறாக பயன்படுத்தப்படும். தமிழகத்தில் நடந்த கிரானைட், மணல் போன்ற இயற்கை வளங்கள் கொள்ளை குறித்து சி.பி.ஐ.விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும்.
22 தேசிய மொழிகளை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும். காங்கிரசுக்கும், அதிலிருந்து வெளியேறிய ஜி.கே.வாசனுக்கும் கொள்கை அளவில் வித்தியாசமில்லை. இருவருமே காமராஜர் ஆட்சி என்ற நோக்கத்தில் செயல்படுகின்றனர். இளங்கோவன், ஜி.கே.வாசன் இருவரும் தங்கள் கொள்கையில் இருந்து பின்வாங்க கூடாது. தி.மு.க. அ.தி.முக. கட்சிகளோடு கூட்டணி அமைக்காமல் இருந்தால் தமிழகத்தில் காமராஜர் ஆட்சி என்பது சாத்தியப்படும்.
2016ல் பா.ம.க. தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும். மாற்று அணி அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும். பா.ம.க.வை தலைமையேற்று வரும் எந்த கட்சியாக இருந்தாலும் கூடட்டணியில் சேர்த்துக்கொள்வோம்.
வேலூர் மாவட்டத்தை வேலூர், அரக்கோணம், திருப்பத்தூர் என 3 ஆக பிரிக்கவேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications