வைகோவுக்காக வாருங்கள் தந்தையே.. பெரியாருக்கு ஒரு உருக்கமான அழைப்பு!
சென்னை: மதிமுகவைச் சேர்ந்த பிரபல பெண் பிரமுகர் டாக்டர் ரொக்கையா பீபி வித்தியாசமான ஒரு அழைப்பை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது தந்தை பெரியாருக்கான அழைப்பாகும்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்காக விருதுநகர் மக்கள் வாக்களிக்க வேண்டும். அதற்குத் தந்தை பெரியாரின் ஆசி வேண்டும் என்று அவர் உருக்கமாக கூறியுள்ளார்.
மேலும் வைகோவை நெல்லை பெரியார் என்றும் அவர் வர்ணித்துள்ளார். டாக்டர் ரொக்கையா பீபியின் அந்த எழுத்து....

பெரியாருக்கு அன்பு வணக்கம்
தந்தை பெரியார் அவர்களுக்கு என் அன்பு வணக்கம்.தங்களைப்பற்றி புத்தகத்தில் படித்தும், மேடையில் பலர் பேசி கேட்கும்பொழுது ஆச்சரியப்படுவேன்.

உங்கள் காலத்தில் வாழவில்லையே தந்தையே
சமூகநீதிக்காக தாங்களின் போராட்டங்களைபடிக்கும் பொழுது, தங்களைப் போன்ற மாமனிதர்கள் வாழ்ந்த காலத்தில் நாம் வாழவில்லைஎன வருத்தம் கூட உண்டு. ஆனால் நான் வாழும் இந்த சமகாலத்தில் உங்களின் மறுபதிப்பாக, நெல்லை பெரியாராக வாழ்ந்து கொண்டிருக்கிறார் "வைகோ" என்ற மனிதர்.

விருதுநகரில் போட்டியிடும் நெல்லை பெரியார்
விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அவர் போட்டியிடுகிறார் என்ற செய்தி தங்களுக்கு கிடைத்திருக்கும் என்பதை நம்புகிறேன்.

வெற்றி பெற முடியவில்லை
பொது வாழ்க்கையில் கடமை, கன்ணியம், கட்டுப்பாடு, தனிமனித ஓழுக்கம், தேர்தலை நேர்மையுடன் பலமுறை தனித்து சந்தித்தும் வெற்றியை பார்க்கமுடியவில்லை.

ஆள், பண பலமே வெல்கிறது
நல்லவர்களை விட ஆள், பணபலம் உள்ள வல்லவர்களுக்கு தான் தாங்களின் வாக்குகள் என பொதுமக்கள் எடுக்கும் முடிவுகள் வேதனையை கொடுத்தன.

அதனால்தான் நீங்கள் அரசியலுக்கு வரவில்லையா தந்தையே...
இதனால் தான் நீங்கள் தேர்தல் அரசியலில் பங்கெடுக்க வில்லையோ என நான் நினைப்பதுண்டு.

வைகோ நாடாளுமன்றம் செல்ல வேண்டும்
தமிழக மக்களின் அடிப்படை பிரச்சனைகள், உரிமைகள், தமிழர்களின் நலன் காக்க நாடாளுமன்றத்திற்க்கு "வைகோ" செல்ல வேண்டுமென்பது காலத்தின் கட்டாயம் என நினைக்கிறேன். இதில் தாங்களுக்கும் உடன்பாடு இருக்கும் என நம்புகிறேன்.

தவறு யார் மீது
இன்று இருக்கும் அரசியல் சூழ்நிலையில் கூட்டணி என்ற முறையில் தான் அது சாத்தியப்படும் என்ற சூழ்நிலையை உருவாக்கிவிடார்கள். தவறு யார் மீது என்பதை பற்றி பேசுவதற்க்கு கால அவகாசம் இல்லை.

ஒரு மாதம் விருதுநகருக்கு வாருங்கள்
எனவே தாங்கள் ஒரு மாத காலம் விருதுநகருக்கு வரவேண்டும். பணம், பதவி ஆள் பலம் ........ இதையெல்லாம் தாண்டி , விருதுநகர் மக்கள் மனதில் இந்த முறை " வைகோ" விற்க்கு தான் வாக்களிக்க வேண்டுமென்ற எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும் .... என்று ரொக்கையா பீபி தனது எழுத்தில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications