டாக்டர். சுப்பையா கொலை வழக்கு: வள்ளியூர் டாக்டர், 3 கூலிப்படையினர் கைது
சென்னை: சென்னையில், டாக்டர் சுப்பையா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் வள்ளியூரைச் சேர்ந்த அரசு மருத்துவர் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த 3 பேரைக் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த செப்டம்பர் மாதம் நரம்பியல் நிபுணரான மருத்துவர் சுப்பையா மர்ம நபர்கள் சிலரால் வெட்டப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி ஒன்பது நாட்களுக்கு பின் உயிரிழந்தார்.
இந்தப் படுகொலை தொடர்பாக காவல்துறையினர் 7 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர். ஏற்கனவே, இந்தக் கொலை வழக்கில் ஹைகோர்ட் வக்கீல் பாசில், அவரது சகோதரர் போரீஸ் ஆகியோர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். அதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர் பொன்னுசாமி, மேரி புஸ்பம் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், நெல்லை மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்த டாக்டர் ஜேம்ஸ் சதீஷ் குமார் என்பவர் தனது கூட்டாளிகள் முருகன் (25), அய்யப்பன் (23), செல்வபிரகாஷ் (23) ஆகியோருடன் சேர்ந்து டாக்டரை கொலை செய்தது போலீசாருக்குத் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து மருத்துவர் மற்றும் கூலிப்படையினர் 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ரூ.12 கோடி மதிப்பிலான பிரச்னைக்குரிய இடத்தில் பாதியை பங்காக தருவதாக கூறியதால், சுப்பையாவை 3 பேரை அனுப்பி கொலை செய்ததாக, ஜேம்ஸ் சதீஸ் குமார் வாக்குமூலம் அளித்திருத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications