ஓபிஎஸ் அணிக்கு வர 20 எம்எல்ஏக்கள் ரெடி... எங்க நம்பர் 135 ஆக மாறும் - பாண்டியராஜன்
நாடகம் முடியும் நேரம் வந்துவிட்டது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தகவல் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் அணி ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 135 ஆக மாறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை: சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து வந்த கல்வி அமைச்சர் பாண்டியராஜன், இன்று முதல்வர் பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று தனது ஆதரவை தெரிவித்துள்ளார். ஓபிஎஸ்க்கு ஆதரவு படிப்படியாக அதிகரிக்கும் என்றும் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 135 பேராக உயரும் என்றும் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார். நாடகம் முடிவுக்கு வரும் நேரம் வந்து விட்டது என்றும் அவர் கூறினார்.
ஓபிஎஸ் அணியில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இன்று காலையில் இணைந்தார்.இவரைத் தொடர்ந்து மேலும் பல அதிமுக அமைச்சர்களும்,எம்.எல்.ஏக்களும் ஓ.பி.எஸ் பக்கம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளுக்கு நாள் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவு வலுத்துக்கொண்டு வருவதால் சசிகலா அணி அச்சமடைந்துள்ளது. இதனால் எம்எல்ஏக்களை சமாதானப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் செய்தி நிறுவனத்திற்கு மாஃபா பாண்டியராஜன் பேட்டியளித்தார். அப்போது அவர், இன்று ஓ.பன்னீர் செல்வத்திற்கான எம்.எல்.ஏக்களின் ஆதரவு ஒன்று அதிகரித்துள்ளது.
இந்த ஆதரவு கூடிய விரைவில் 135ஆக அதிகரிக்கும். இந்த நாடகம் நிறைவடையும் நேரம் வந்துவிட்டது. தற்போது கூவத்தூரில் இருக்கக் கூடிய 20 எம்.எல்.ஏக்களோடு நான் தொடர்பில் இருக்கிறேன் என்றார் . அங்கிருக்கும் எம்.எல்.ஏக்கள் தங்கள் செல்போன்களை அணைத்து வைத்திருப்பார்கள் என்பதை நான் நம்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மாஃபா பாண்டியராஜனின் இந்த கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்எல்ஏக்களை கவனித்த சசிகலா குரூப் அமைச்சர்களை கண்காணிக்க விட்டுவிட்டது போல, அமைச்சர்கள் நிலோபர் கபில், ராஜேந்திர பாலாஜி, ஜெயக்குமார், கே.சி. வீரமணி, எஸ்.பி.வேலுமணி ஆகிய அமைச்சர்கள் ஓபிஎஸ் வீட்டுக்குச் சென்று ஆதரவு தெரிவிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
ஒபிஎஸ் அணி நிமிடத்திற்கு நிமிடம் களைகட்டி வருகிறது. கிரீன்வேஸ்சாலை நொடிக்கு நொடி பரபரப்படைந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications