ஜாதி கொலை, தமிழ் புறக்கணிப்பு.. திராவிட கட்சிகளின் வீழ்ச்சி தொடங்கி விட்டது: இல.கணேசன் ஆரூடம்
சென்னை: தமிழகத்தில் திராவிட கட்சிகளின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான இல.கணேசன் தெரிவித்தார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது இல.கணேசன் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது: தமிழ் மொழியை வளர்ப்போம், ஜாதி வேறுபாட்டை ஒழிப்போம் என்பதெல்லாம் திராவிட கட்சிகளின் கோஷமாக இருந்தது.

ஆனால், தமிழகத்தில் தமிழ் தற்போது மெல்ல, மெல்ல அழிந்துவருகிறது. எங்கும் ஆங்கிலமயமாக காட்சியளிக்கிறது. திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஜாதி கொடுமைகளை வளர்த்துவிட்டுள்ளன.
பல்வேறு உதாரணங்களை கூற முடியும் என்றாலும் சமீபத்திய உதாரணம், உடுமலையில் நடைபெற்ற கொலை சம்பவமாகும். தமிழகத்தில் திராவிட கட்சிகளின் வீழ்ச்சிக்கு தொடக்க புள்ளி வைக்கப்பட்டுவிட்டது.
கல்லூரி மாணவ, மாணவிகளும், இளைஞர்களும் பாஜகவை நோக்கி பெரும்பான்மையாக வருகிறார்கள்.
நான் ஆர்.எஸ்.எஸ் பின்னணியில் இருந்து வந்துள்ளேன். ஜாதி பார்க்காதே, ஜாதி பற்றி பேசாதே என்பதே ஆர்.எஸ்.எஸ் கொள்கை. நாடுதான் முதல் என நினைத்தால், ஜாதி பற்றிய எண்ணம் வராது.
தற்கொலை செய்துகொள்வதும், கொலை செய்வதும் தமிழகத்தில் சகஜமாக நடைபெறுகிறது. தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த கல்வி நிலையங்கள் முயல வேண்டும். தற்கொலை செய்வது வீரம் இல்லை, கோழைத்தனம். இவ்வாறு இல.கணேசன் தெரிவித்தார்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications