Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குடிக்காதே என சொல்ல முடியாது! அளவோடு குடிக்க அட்வைஸ் செய்யலாம்.. கள்ளக்குறிச்சியில் கமல்ஹாசன் பேட்டி

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இன்று கள்ளக்குறிச்சிக்கு வருகை தந்தார். அங்கு கள்ளச்சாராயம் குடித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அவர்களது உடல்நலன் குறித்து கேட்டறிந்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 150-க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மெத்தனால் கலந்த சாராயம் பாக்கெட்டுகளை வாங்கி அவர்கள் குடித்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டனர்.

mnm Kamal Haasan kallakurichi liquor death tamil nadu

திடீர் வாந்தி, மயக்கம், உள்ளிட்ட உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பலரும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர். தற்போது வரை கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. ஒட்டு மொத்த தமிழகத்தையே இந்த சம்பவம் அதிரவைத்துள்ளது. மேலும் ஆஸ்பத்திரியில் உள்ளவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க உடனடியாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் நீதியரசர் கோகுல்தாஷ் தலைமையில் ஒருநபர் ஆணைய விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் போன்று இனி நடக்காதவாறு இரும்புக்கரம் கொண்டு தடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் கள்ளக்குறிச்சிக்கு வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இன்று கள்ளக்குறிச்சிக்கு வருகை தந்தார்.

கள்ளகுறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நடிகர் கமல்ஹாசன் ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்டவர்களின் உடல் நலன் குறித்தும் அவர் கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது:-

சாலை விபத்து ஏற்படுவதனால் போக்குவரத்தை நிறுத்த முடியாது. டாஸ்மாக்கை மூடினால் அனைத்தும் சரியாகிவிடும் என்று நினைப்பது தவறான கருத்து. டாஸ்மாக்கில் இருந்து வரும் வருமானத்தை எந்த அரசாக இருந்தாலும் அதன் ஒரு பகுதியை ஓரளவுக்கு மேல் குடிக்க கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்த பயன்படுத்த வேண்டும்.

மது குடிப்பவர்களை குடிக்க வேண்டாம், குடிக்காதே என்று சொல்ல முடியாது. ஒன்று செய்யலாம், அளவோடு குடிப்பதற்கு அட்வைஸ் செய்யலாம். குடிக்க வேண்டாம் என்று கூறுவதை விட அளவோடு குடிக்க கூறி மனோத்தத்துவ ரீதியாக வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மதுபான கடைகளுக்கு அருகே ஆலோசனை மையங்களை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜயும் கள்ளக்குறிச்சிக்கு வந்து பாதிக்கபட்டவர்களை நேரில் சந்தித்து அவர்களது உடல்நல் குறித்து கேட்டறிந்து, ஆறுதல் தெரிவித்தார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறும் தவெக நிர்வாகிகளை கேட்டுக்கொண்டார்.

முன்னதாக கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்திற்கு விடியா திமுக அரசின் மெத்தன போக்கே காரணம் என்றும், இந்த அரசு தூங்காமல் உடனடி நடவடிக்கை எடுத்து இருந்தால் இந்த துரதிர்ஷ்ட சம்பவங்கள் நடந்திருக்காது என்றும் கூறினார். மேலும் கள்ளக்குறிச்சி சாராய விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதேபோல், அதிமுக சார்பில் கள்ளுக்குறிச்சி விஷ சாராய சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை அறிவித்துள்ளது.

இதேபோல் கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக பாஜக சார்பில் தமிழகம் முழுக்க நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் அந்தந்த மாவட்ட தலைவர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+