கள்ளத் தொடர்பைக் கண்டித்த 72 வயது தாயை கூலிப்படை வைத்துக் கொன்ற மகன்!
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே, தனது கள்ளக்காதலைக் கண்டித்த 72 வயது தாயாரை மூதாட்டி என்றும் பார்க்காமல் ஆள் வைத்துக் கொலை செய்துள்ளார் ஒரு நபர்.
கமுதி அருகே முஷ்டக்குறிச்சியை சேர்ந்தவர் மாரிமுத்து (35). அரசு போக்குவரத்துக் கழக ராமநாதபுரம் கிளையில் டிரைவராக உள்ளார். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
மாரிமுத்துவுக்குப் பல பெண்களுடன் தொடர்பு இருந்தது. தாறுமாறாக வாழ்ந்து வந்தார். இதை அவரது தாயாரான 72 வயது காளியம்மாள் கண்டித்து வந்தார். இப்படி திரியாதே, மனைவி, குழந்தைகளுடன் ஒழுக்கமாக இரு என்று அறிவுறுத்தி வந்தார். ஆனால் மாரிமுத்து அதைப் பொருட்படுத்துவதில்லை.
இந்த நிலையில், காளியம்மாள் கடந்த ஆண்டு அக்டோபரில் வீட்டில் பிணமாகக் கிடந்தார். அவரை சிலர் கொன்று அவர் போட்டிருந்த 5 பவுன் நகையைத் திருடிச் சென்றிருந்தனர். இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் மாரிமுத்து சிக்கினார். கள்ளத்தொடர்பை கண்டித்ததால் கூலிப்படையை ஏவி தாயை கொலை செய்ததாக விசாரணையின் போது மாரிமுத்து போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் நல்லமீட்டானையும் நேற்று கைது செய்தனர். இந்த கொலையில் தொடர்புடைய மேலும் சிலரை தேடிவருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications