பஞ்சு லாரி தீப்பிடித்ததாய் தவறாக நினைத்து கீழே குதித்த ஓட்டுநர் பரிதாப பலி!
சேலம்: சேலத்தில் பஞ்சு பாரம் ஏற்றிய லாரி மின்கம்பிகள் மீது உரசியதால் தீப்பிடித்ததாக தவறுதலாக எண்ணி கீழே குதித்த டிரைவர் பரிதாபமாக பலியாகிய சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகேயுள்ள தேவராயன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ரவி. இவர் ஆந்திர மாநிலம், குண்டூரிலிருந்து கோவை பல்லடத்தில் இயங்கிவரும் ஒரு நூற்பாலைக்கு கொண்டு செல்வதற்காக லாரியில் பஞ்சு பாரம் ஏற்றிக் கொண்டு அரூர் வழியாகச் சென்று கொண்டிருந்தார்.
இவர் ஓட்டிவந்த லாரி, அரூர்-சேலம் நெடுஞ்சாலையில் செல்லம்பட்டி புதூர் சாலை வழியாகச் சென்று கொண்டிருந்த போது அந்த வழியில் தாழ்வான நிலையில் இருந்த மின் கம்பிகள் மீது லாரியிலிருந்த பஞ்சு மூட்டைகள் உரசியதில் கட்டுப்பாட்டை இழந்த லாரி அங்கிருந்த மின் கம்பம் மீது மோதியது.
மின் கம்பியில் மோதியதால் லாரி தீ பிடித்திருக்கும் என்ற அச்சத்தில் ஓட்டுநர் ரவி லாரியை விட்டு இறங்கி சாலையில் ஓடினார். அப்போது தவறி கீழே விழுந்ததில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இரத்தப்போக்கு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அரூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications